உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கார்ல் மார்க்ஸ் எழுதிய முதலீடு

21

சிக்கிற்று. சமூகத்துக்குட்பட்ட தொழில்கள், சரக்குகளில் கவனம் செலுத்துகின்றன. சமூகத்தை ஆட்டிப்படைக்கும் இப்புது வணிக வகுப்பு சரக்குகளின் மதிப்பை மறைத்து, சரக்குகளை ஆட் கொள்வதன் மூலம் மக்களை ஆட்கொண்டு ஆட்டிப்படைக்கும் பணத்தில் கருத்துச் செலுத்துகிறது.

வாணிக முதலாளித்துவத்துக்கு மூலமான மதிப்பீட்டுப் பொருளும் சமூகம் கடந்த பண்பும்தான் என்பதை நாணயச் செலாவணி இன்றும் காட்டுகிறது. எப்படியெனில், ஒவ்வொரு நாணயமும் அதனை வெளியிடும் அரசியல் ஆட்சிக்குட்பட்ட சமூகத்துக்கு வெளியே மதிப்புப் பெறுவதில்லை. நாணயங்களின் பயன் மதிப்பீட்டிற்குக் காரணமாக இருக்கும் நாணயங்களின் மூலப் பொருள்களான தங்கம், வெள்ளி ஆகியவற்றின் அளவாலேயே அவை மதிப்புப் பெறுகின்றன. தங்கம் வெள்ளி நாணயங்களின் மதிப்புத்தான் நாணயங்களின் மதிப்புப் போலவே அரசியல் ஆதிக்க எல்லைக்கு உட்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. அத்துடன் எந்த வடிவிலும் நாடுகடந்த செலாவணிகள் நாணயத்தின் சின்னங்களாயிருப்ப தில்லை; குறிப்பிட்ட அளவு தங்கம், வெள்ளி ஆகியவற்றின் சின்னங்களே. உலக வாணிகத் திலீடுபட்ட நாடுகளின் நாணயங்கள் யாவும் இன்னும் எடைகளின் பெயர்களாகவே இருப்பதன் காரணமும் இதுவே. ஆங்கிலப் பொன் நாணயத்தின் பெயர் (Pound) உண்மையில் ஒரு கல் எடையின் (Pound) பெயரே. தொடக்கத்தில் ஒரு கல் எடை வெள்ளியின் மதிப்பையே அது குறித்திருந்தது.

வணிக முதலாளித்துவம்

நாணயமாக வழங்கும் பொன் வெள்ளி ஆகியவற்றுக்குப் பயன் மதிப்பும் உண்டு; விலை மதிப்பும் உண்டு. பயன்மதிப்புக் காரணமாகவே மக்கள் அதை நாடினர்; நாடி உழைத்து வார்த்து உருவாக்க முயன்றனர். அப்போது அவற்றின் உழைப்பின் அளவே மற்றெல்லாப் பொருள்களின் உழைப்பின் அளவைப் போல, அவற்றுக்கு விலைமதிப்புத் தந்தது. ஆனால் இந்நிலையில் அவற்றுக்கு ஒரு புதுவகை வாய்ப்பு ஏற்பட்டது.

விலை மதிப்பீடாக வழங்கிய பொருள்களுள், அவை மற்ற எல்லாவற்றையும்விட அவ்வகைக்கு ஏற்றவை என்பது