உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

அப்பாத்துரையம் - 45

வாங்குபவன் அவனிடம் 110 வெள்ளி கொடுக்கிறான். ஆனால் இந்தத் தொகையில் முன்பு அவனிடம் விற்றவன் பெற்றது 100 வெள்ளிதான். வாங்குபவன் கொடுத்த தொகையில் 10 வெள்ளி விற்றவன் கையில் சென்று சேரவில்லை. வணிக முதலாளி அதைக் கைப்பற்றிக் கொள்கிறான்.

உழையாத வணிகர், அதாவது பொருள் உற்பத்திக்கு உதவாதவர் அப்பொருளின் மதிப்பில் பங்கு பெறும் வகை இதுவே.

வாணிக ஆதாயம்

சரக்கின் விலை அதை உண்டுபண்ணியவனுடைய இன்றியமையாத சமூக உழைப்பின் மதிப்பீடு என்பது மறக்கப்பட்டதன் விளைவு இது. இம் மறதி காரணமாகவே உழைப்புக்குக் கூலி, வாணிகத்துக்கு ஆதாயம் என்ற நிலை ஏற்பட்டது.

வாணிகமும் ஒரு முயற்சியா யிருக்கக்கூடும். ஆனால் அது இன்றியமையா முயற்சியல்ல. ஆனால் இன்றியமையா உழைப்பு என்று கூறமுடியாத வாணிகத்துக்குத் தரப்படுவது கூலியல்ல, ஆதாயம்! உழைப்பவன் கூலியைக் கெஞ்சிப் பெறவேண்டும். வணிகன் அதை உரிமையுடன் எடுத்துக்கொள்ளலாம்.

வணிகனுக்கு இந்தச் சந்தர்ப்பம், இந்த உரிமை எங்கிருந்து கிடைத்தது? மனித சமூகம் இதைப்பற்றி ஏன் சிந்திக்கவில்லை?

மனித உலகம் இன்னும் ஓர் உலகமாய் விடவில்லை. அது மட்டுமல்ல. மனித சமுதாயம் ஒரு நாடு, ஒரு இன எல்லையில் கூட ஒரு சமுதாயம் ஆகிவிடவில்லை. சமுதாயத்தினுள் சமுதாயங்களாக வகுப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு தனிப்பண்பும் தனி நோக்கமும் ஏற்படுகின்றன. இந்நிலையில் மனித உலகில் வாணிகம் சமூக வாணிகமாகத் தொடங்க வில்லை. சமூக எல்லை முடிவுற்ற இடத்திலேயே வாணிகம் தொடங்கியுள்ளது. அது மட்டுமல்ல. சமூகத்துக்குச் சமூகம் தொடங்கிய அந்த வாணிகம் இரண்டு சமூகத்துக்கும்

டையே இரு சமூகங்களுக்கும் கட்டுப்படாத, ஆனால் இரு சமூகங்களையும் ஆட்டிப் படைக்கிற ஒரு புது வகுப்பின் கையில்