உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கார்ல் மார்க்ஸ் எழுதிய முதலீடு

19

நோக்கிலிருந்துதான் வாணிகத்தை ச ஈ---ழூ ப ஈழூ ச என்று ழூ பஈ குறித்தோம். வாணிக முறையில் அதைக் குறிப்பதனால்

என்றே குறிக்க வேண்டும். ஏனெனில் வாங்குதல் விற்றல் ஆகிய

ரு பேரத்திலும், ஆதாயம் நாடுபவனும் பேரத்தில் முனைபவனும் 'ப' என்பதின் பிரதிநிதியான வணிகனே. அவன் பணம் கொடுத்து முதலில் 'ச' விடமிருந்து சரக்கு வாங்கி, பின் இரண்டாவது 'ச' விடம் அதே சரக்கைக் கொடுத்து இன்னும் மிகுதி பணம் பெறுகிறான்.

ப<---> ச என்ற பேரத்தின் முதற்படியில், வணிகன் பணத்தைக் கொடுத்துச் சரக்கு வாங்குகிறான். ஆனால் அவன் சரக்கு வாங்குவது சரக்கை நாடியல்ல. ஏனெனில் ச<---> ப என்ற பேரத்தின் இரண்டாவது படியில் அவன் மீண்டும் சரக்கைக் கொடுத்துப் பணத்தைப் பெறுகிறான். இரண்டு படியிலும் அவன் ரு சரக்குக் கொடுத்து மற்றொரு சரக்குப் பெறவில்லை. பணம் என்ற ஒரே சரக்கைக் கொடுத்துப் பணம் என்ற அதே சரக்கை மீண்டும் பெறுகிறான். ஆனால் முதலில் கொடுத்த பணம் 100 வள்ளியானால், இப்போது வாங்கும் பணம் வெள்ளியாயிருக்கிறது.

110

சரக்கைக் கொடுத்து மற்றொரு சரக்கை வாங்குபவன் சரக்கு எவ்வளவு மதிப்புக் கூடுதலாயிருந்தாலும் எவ்வளவு மதிப்புக் குறைவாயிருந்தாலும் அதனால் சற்று மிகுதி பயன், சற்றுக் குறைந்த பயன் அடைவது என்பது தவிர, வேறு நிலையான கேடோ நலனோ அடைய முடியாது. அத்துடன் வாங்குபவனே விற்பவனாகவும் இருப்பதால் வாங்குவதில் உள்ள சாதக பாதகங்கள் விற்பனையில் சரிசெய்யப்படுகின்றன.ஆனால் வணிக மாற்றினிடையே பெரும்பாலான சமூக உறுப்பினர் சரக்கு வாங்குபவர்,சரக்கு விற்பவர் ஆகியவர்களே. இருசாராரும் பாதக நிலையே அடைகின்றனர். சாதக நிலை அடைவது இருவருக்கும் இடையேயுள்ள வணிகன்தான். சரக்கை அவனிடமிருந்து