உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

அப்பாத்துரையம் - 45

சரக்கு என்பதை 'ச' என்ற எழுத்துக் குறிப்பாக வைத்துக் கொள்வோம். பண்டமாற்று என்பது சரக்குக்குச் சரக்கு அதாவது

ச <---> ச

என்ற பேரத்தைக் காட்டுகிறது. ஆனால் வணிகன் மூலம் இது நடைபெற்றால் அது

ச<---> ப <---> ச

ஆகிறது. இங்கே 'ப' என்பது பணம் ஆகும். சரக்கு = பணம் என்ற முறையில் சரக்குடையவன் அதற்குச் சமமான மதிப்புடைய பணம் பெறுகிறான். இது பேரத்தின் முதற்படி. இரண்டாவது படியில், பணம் = சரக்கு என்ற முறையில், பணமுடையவன் அதை மீண்டும் சரக்காக மாற்றுகிறான். பண்டமாற்றைப் போலவே சரக்கு = பணம் = சரக்கு என்ற இம்முறையிலும் எவருக்கும் ஆதாயம் இருக்க முடியாது. ஆனால், முதல் ‘ச’வுக்கும் இரண்டாவது 'ச'வுக்கும் டையேயுள்ள 'ப' வாங்கிக் கொடுக்கிறான். அவன் சரக்கின் பயன்மதிப்புப் பெறுவதில்லை. பின் என்ன பெறுகிறான். ஆதாயம்! இது எப்படி முடிகிறது?

=

ச<---> ப என்ற முதற்படியில் பேரம் நடைபெறும் சமுதாயம் அல்லது சமுதாயச் சூழல் வேறு. ப<---> ச என்ற இரண்டாம் படியில் பேரம் நடைபெறும். சமுதாயம் அல்லது சமுதாயச் சூழல்வேறு. வேறுவேறு சமுதாயங்களிலுள்ள வேறுவேறு மதிப்பீடுகளிடையே ஏற்படும் உயர்வு தாழ்வு வேற்றுமையால்தான் வணிகன் ஆதாயம் பெறுகிறான்.

பண்டமாற்று, சமூக உறுப்பினராகிய இரண்டு பயனீட் டாளர்கள் தம் பொதுநலத்துக்காக நடத்தும் பேரம். ஆனால் வாணிகம் இரண்டு சமூகம் அல்லது சமூகச் சூழலிடையே, சமூகத்தின் புறஉறுப்பினர் அல்லது ஒரு தனிப்பட்ட மனிதர் இரு சமூகங்களுடனும் நடத்தும் இரண்டகமான பேரம் ஆகும்.

பண்டமாற்றில் பயன்மதிப்பாளரே பேரத்தை முனைந்து இயக்குபவ ராகின்றனர். வாணிகத்தில் பேரத்தில் முனைபவர். அதில் பயன்நாடுபவர் பயன்மதிப்பாளர் அல்ல; பணத்தின் பேராளனான வணிகரே. இதனால்தான் வாணிகம் பண்டமாற்றிலிருந்து மாறுபடுகிறது. உண்மையில் பண்டமாற்று