உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

அப்பாத்துரையம் - 45

செய்பொருள் அல்லது சரக்கின் விலைமதிப்பு அப் பொருளின் விலையைவிட எப்போதும் கூடுதலாகவே இருக்கமுடியும். ஏனென்றால் மூலப்பொருளின் விலை மதிப்பு சரக்கின் விலைமதிப்பில் எப்போதும் அடங்கியிருக்கிறது.ஆகவே சரக்கின் விலைமதிப்பில் ஒரு பகுதி மூலப்பொருளின் விலைமதிப்பே. உழைப்புக்கு முதலாளி கொடுத்த விலைமதிப்பு ஆகிய கூலியும், கட்டடம் இயந்திர சாதனம் ஆகியவற்றில் நாட்கழிவாலும் உழைப்பாலும் ஏற்படும் தேய்மானமும் மூலப்பொருள் களில் ஏற்படும் சேதாரமும் இதே விலைமதிப்பில் உழைப்பின் செலவாகச் சேருகின்றன. இத்தனையும் சேர்ந்தே சரக்கின் விலை மதிப்பு ஆகின்றது.

இந்த அளவுக்குமேல் சரக்கின் விலைமதிப்பு உயர முடியாது. ஏனென்றால் சமூகத்திலுள்ள இயற்கைப் போட்டி காரணமாக, விலை மதிப்பு இதற்குமேல் சென்றால் அதனைச் சமூகம் ஏற்கமாட்டாது. அதேசமயம் மூலப்பொருள்கள், இயந்திரக் கருவிகள் ஆகியவற்றின் விலை மதிப்பில் சமூக விலைக்களத்தில் குறைவு கூடுதல் ஏற்பட்டாலன்றி, செலவினத்திலும் எத்தகைய குறைவும் ஏற்படமுடியாது. எனவே மேற்குறிப்பிட்ட இரண்டு செய்திகள் நடைபெற்றாலல்லாமல் சரக்கின் உண்மையான மதிப்பு மாறுவதில்லை.

மூலப்பொருளின்

விலைமதிப்பு, இயந்திரங்கள், சாதனங்களின் விலைமதிப்பு ஆகிய யாவும் அவற்றவற்றுக்குரிய உழைப்பு மதிப்பே யாகும். இவை நீங்கலான சரக்கின் மதிப்பும் உழைப்பு மதிப்பும் ஒன்றேயாகும். இந்த உழைப்பு மதிப்பையே முதலாளி கூலி என்ற விலை கொடுத்து வாங்கிவிடுகிறான். இந்தக் கூலி எவ்வாறு அறுதியிட்டு அளக்கப்படுகிறது? அது உண்மையான உழைப்பு மதிப்பைக் குறிக்கிறதா என்று நாம் பார்க்க வேண்டும்.

தொழில் முன்னேறுந்தோறும், சிறப்பாக இயந்திரத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படுந்தோறும், உழைப்பின் விலைமதிப்புக் குறைகிறது. இன்றியமையாது தேவைப்படுந் தொழிலாளிகளின் தொகையும் வரவரக் குறைகிறது. இதனால் ஏற்படும் போட்டி தொழிலாளர் கூலியையும் இன்றியமை யாத