உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




52

அப்பாத்துரையம் - 45

நலங்கள் பற்றிய அறிவு உடைய இணக்கம் அதாவது கடமை ஆகாது.

மனிதரிடையே வேறுபாடுகள் உண்டு. இயற்கை வேறுபாடுகள் கூட உண்டு. ஆனால் உயர்வு தாழ்வு கிடையாது. சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் சில வேறுபாடுகள் உயர்வுதாழ்வு உண்டுபண்ணலாம். ஆனால் இது நிலையான தன்று. வலிமையுடையவர் ஆள்வர் சில காலம். செல்வமுடைய வர், அறிவுடையவர் என வேறு பல திறத்தவர் வேறு பல காலம் ஆள்வர். ஆகவே மொத்தத்தில் மனிதரிடையே வேறுபாடுகள் உண்டானாலும், உரிமையில் எல்லோரும் சரிநிகரே ஆவர்.

போர் வெற்றி, அடிமைத்தனத்துக்கும் காரணம், ஆட்சி உரிமைக்கும் காரணம் என்று அறிஞர் ஹாப்ஸ், குரோட்டியஸ் ஆகியோர் கூறுகிறார்கள். போர் வெற்றி அடிமைத்தனத்துக்குக் காரணமாகலாம். ஆனால் அந்த வெற்றியின் வலிமை இருக்கும் அளவே அடிமைத்தனம் நிலவும். ஆட்சியுரிமையோ அல்லது வேறு எந்த உரிமையோ போர் வெற்றியினால் ஏற்பட முடியாது. போரில் நாட்டு மக்களுக்கு நாட்டு மக்கள் பகைவரல்லர். மன்னருக்கு மன்னர்தான் பகைவர். தோற்ற மன்னர் நாடிழக்கலாம். அதனால் வென்றவர்க்குப் புது உரிமை வந்து விடாது. ஏனெனில் உரிமை எப்போதும் மக்கள் விருப்பத்தைப் பொறுத்தது.

போரில் கொல்லும் உரிமையால், கொல்லாது விடப்பட்டவர் உயிர்மீது வெற்றியாளருக்கு உரிமை ஏற்படுகிறது என்று சிலர் கூறுகின்றனர். கொல்லும் வலிமை அல்லது வாய்ப்பு உடையவராயிருப்பது கொல்லும் உரிமை ஆகாது, மேலும்

கால்லாது விடுதல் என்பது அச்சுறுத்தலேயாகும். அச்சம் அடிமைத்தனம் உண்டுபண்ணலாம். ஆனால் உரிமை தராது. அடிமைகள் உண்மையில் உரிமை மறுக்கப் பட்டவரே, உரிமை இழந்தவர் அல்லர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆட்சி உரிமையின் ஒரே அடிப்படை. ஆளப்படுபவர் ணக்கம். இந்த இணக்கம் அவர்கள் முன்னைய விருப்பத்தின் மரபு: அவ்விருப்பத்தைச் சமூகமே அறிய விரும்பும்போதுதான் பெரும்பாலார் கருத்தறிவதற்கான மொழியுரிமை தேவைப் பட்டது. சிறுபான்மையினர் இதை ஏற்பதிலிருந்து இன்றைய