உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஙச முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை பெயின் என்பவர் எழுதிய அரியதோர் அணியிலக் கண நூலிலுங் கண்டுகொள்க. இந் நுணுக்கமெல்லாம் நன்கறிந்து செய்யுளியற்றிய நப்பூதனார் பேரறிவும் பேராற்றலும் பெரிதும் வியுக்கற்பாலனவாம் என்க. முல்லைப்பாட்டில் நீளச்சென்று பொருந்தும் சொற்றொடர் முடிபு: மாட்டு இனி, மேற்கூறியவாறு முல்லைப்பொருள் ஒழுக்கம் உங-வது வரியிலே இடையறுந்து நிற்ப, நடுவே வஞ்சிப் பொருள் புகுத்தப்பட்டுத் திரும்பவும் அO - வதுவரியிலே தன்பொருள் பொருந்தி, அஅ-வது வரியில் அதுமுற்றுப் பெறுந தறுவாயிற் பின்னும் முடிவுபெறாததுபோல்நின்று, இடையே வேறுபொருள் தழுவி கOகூ -வது வரியிலே பொருள் முதிர்ச்சிபெற்று முடிந்தது உற்றுணரற் பால தாம் என்க. இங்ஙனம் ஒரு பாட்டின் முதன்மைப் பொருள் இடையிடையே அறுந்து அகன்றுபோய்ப் பொருந்தி முடிதல் இம் முல்லைப்பாட்டிற்கும் இதனொடு சேர்ந்த ஏனை ஒன்பது பாட்டுக்களுக்கும் பொதுவியற் கையாகும். இவ்வாறு அகன்றுகிடக்கும் பொருளை அணுகப்பொருத்திக் காட்டுதலையே ஆசிரியர் தொல் காப்பியனார்.'மாட்டு' என்பர். "அகன்றுபொருள் கிடப்பினும் அணுகிய நிலையி னும், இயன்றுபொருள் முடியத் தந்தனர் உணர்த்தல், மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின்" என்பது சூத்திரம் (தொல்காப்பியம், செய்யுளில், உகக).