உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டின் வரலாறு செய்யுட்பொருள் நிகழும் இடம், அகூ-வது அடியிற் காண்க. சக இனிப், பாட்டுடைத்தலைவி யிருக்கும் இடம் பல் லான் மலிந்த முல்லைநிலக் காட்டில் மிகவும் அழகிதா கக் கட்டப்பட்ட எழுநிலை மாடமாகும். பரியமரங்கள் நெருங்கி அடர்ந்து தண்நிழல் பயப்பவுங், காட்டுக் கோழிகள் பேட்டுடனுங் குஞ்சுடனும் முல்லைக்கொடி கள் பிணைந்து படர்ந்த பந்தரின் கீழ்ச் செல்லவும், புள் ளினங்கள் செய்யும் ஓசையன்றி வேற்றொலி விரவாது தனித்து மிக்க எழிலுடன் விளங்கும் முல்லைக்காடு கா தல்இன்பம் நுகருந் தலைமக்கட்குக் கழிபெருஞ் சுவை மிகுக்குஞ் சிறப்புடைமையாற் பழையநாளிற் பெருஞ் செல்வவளம் வாய்ந்தோர் அங்கு மாளிகை அமைத்து அதில் வாழ்தல் வழக்கம். உசு -முதல் எகூ -வது அடிகாறுங் காண்க. இனித், தலைமகளைப்பிரிந்து வினைமுடிக்கப்போன தலைமகன் இருக்கும் இடம்: பகைவர் நகரத்தைச் சூழ்ந் து அரணாயிருக்கும் முல்லைக்காட்டிற் பாடிவீடாகும். முற்கால இயற்கைப்படி அரசர் தம்நகரத்திற்குக் கர்வ லாக மதில், அகழி, பாலைவெளி முதலியவற்றை அரணாக அமைத்தலேயன்றி, அவற்றிற்கும் புறத்தே அடர்ந்த காடு களையுங் காவலரணாக வைப்பர். இவ்வாறு சமைக்கப் பட்ட பகைவரது காட்டிற்சென்று பாட்டுடைத்தலைவன் பரீசறையிலிருக்கும் இருப்புச் சொல்லப்படுகின்றது. 6