உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருசு முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை கின்ற உணர்வும், ஒன்று சேர்தலால் அறிவுமயங்கியும், அவ்வறிவு மயக்கத்தாற் பெருமூச்செறிந்து நடுங்கியும், அந்நடுக்கத்தால் உடம்பிற் செறித்த அணிகலங்கள் சிறிது கழணப் பெற்றும், ஏழடுக்கு மாளிகையிற் பாவை விளக்கு எரியக் கூடல்வாயிலிலே மழைநீர் சொரியும் ஓசை காதில் விழ இம் மாலைக்காலத்திற் படுக்கையிற் கிடக் கின்றாள். அகூ - முதற் கடைசி வரையில், தலைவன் மீண்டு வருத லும், நாட்டின் மழைகாலச்சிறப்பும் இனித், தலைமகன் தன் மாற்றாரையெல்லாம் வென்று பகைப் புலத்தைக் கவர்ந்துகொண்ட பெரும் படை பொடு வெற்றிக்கொடியை உயரத்தூக்கி ஊதுகொம்புஞ் சங்கும் முழங்கவுங், காசாஞ்செடிகள் நீல மலர்களைப் பூக்கவுங், கொன்றைமரங்கள் பொன்போல் மலரவுங், காந்தள் அழகிய கைபோல் விரியவுந், தோன்றிப்பூச் சிவப்பாக அலரவும், வரகங்கொல்லையில் இளமான்கள் தாவியோடவுங், கார்காலத்து முற்றங் காயினையுடைய வள்ளிக்காடு பின்போகவும் முல்லை நிலத்திலே மீண்டு வரும்போது, அவனது தேரிற்கட்டிய குதிரை கனைக் கும் ஓசையானது ஆற்றிக்கொண்டு அங்கானங்கிடக்குத் தலைகள் செவியிலே நிறைந்து ஆரவாரித்தது என்க.