உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

7

சொல்லியும் விடுவர். அவர்க்கோ இவர் யாரெனத் தெரியாமல் திகைப்புண்டாம். அந்நிலையை அறிந்து இவர் வேறொருவர் என்பதை ‘அசப்பிலே பார்த்தால் என் நண்பர் இன்னாரைப் போலத் தோற்றம் இருந்தது. அவரென்று நினைத்துக் கொண்டேன்; பொறுத்துக் கொள்ளுங்கள்" என்பர். இதில் அசப்பில் என்பது ஒரு பார்வையில் (ஒரு தோற்றத்தில்) என்னும் பொருள் தருகிறது.

அசைபோடல் - உண்ணுதல், எண்ணுதல்.

ஆடு மாடுகள் அசைபோடுதல் உடை யவை. அவை அசை போட்டுத் தீனி தின்னும், அவற்றைப் போல் சிலர் எப்பொழுதும் எதையாவது மென்று கொண்டேயிருப்பர். அவர்களிடம் என்ன, 'அசைபோடுகிறீர்களா?” “என்ன பஞ்சமானாலும் உங்களுக்கு அசைபோடல் நில்லாது” என்பதுண்டு.

66

புல் கண்ட இடத்தில் மேய்ந்து, நீர் கண்ட இடத்திலே குடித்து, நிழல் கண்ட இடத்திலே படுத்து அசை போடும் மாடு களைக் காண்பார் அசைபோடல் விளக்கம் பெறுவார். இனி எண்ணுதலை அசை போடுதல்' என்பது அறிவாளர் வழக்கம். மீள மீளக் கொண்டு வந்தும் புரட்டியும் மாற்றியும் எண்ணுதல் அசையிடுவது போன்றதாகலின் அப்பொருளுக்கும் ஆயிற்று. அஞ்சடித்தல் - தொழில் படுத்து விடுதல்.

அவர் கடை அஞ்சடிக்கிறது அஞ்சடிக்கிறது” என்றால், “ஈயோட்டு கிறார்" என்பது போன்ற வழக்காகும் : கடை யில் வணிகம் நிகழவில்லை என்பது பொருள். "தொழில் சீராக இல்லை அஞ்சடித்து விட்டது” என்பதும் கேட்கக் கூடியது. அஞ்சு என்பது ‘ஐந்து' என்னும் பொருளது. இங்கு ஐந்து, மெய் வாய் கண் மூக்கு செவியாகிய ஐந்து உறுப்புகளையுடைய உடலைக் குறித்து நிற்கிறது. அடித்துப் போட்ட உடல் அசையாமல் கிடப்பது போலக் கடை வணிகமும், தொழில் இயக்கமும் படுத்து விட்டன என்பது விளக்கப் பொருளாம். சுறுசுறுப்பு இல்லாதவனைப் பார்த்தும் ‘என்ன அஞ்சடித்துப்போய் இருக் கிறாய்' என்பதும் உண்டு. இது இப்பொருளை மேலும் தெளி வாக்கும்.

அடக்கம் - அடக்கம் செய்யப்பட்ட இடம்

மூச்சு, அடக்கி அப்படியே இயக்கமறச் செய்வது அடக்கம் எனப்படும். மூச்சுப் பயிற்சியில் தேர்ந்த ஓகியர் தம் மூச்சை இயங்காமல் அடக்கி இயற்கை எய்திவிடலுண்டு. அத்தகைய