உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுக்கு - ஐந்து

வழக்குச் சொல் அகராதி

9

அடுக்குப் பாறை, அடுக்குப்பானை, அடுக்கு மொழி, அடுக்கு மல்லிகை என்பவற்றிலுள்ள அடுக்கு என்பது அடுக்கு தலைக் குறித்தது. எண்ணைக் குறித்தது இல்லை. ஆனால், வாழையிலையை ஒன்றனுள் ஒன்றாக அடுக்கி வைப்பது வழக்கம். அவ்வடுக்கு ஒன்றில் ஐந்து இலைகள் எண்ணி வைக்கப்படும். அடுக்குச் சட்டி என்பது ஒன்றனுள் ஒன்று அடங்கும் ஐந்து சட்டி களையுடையதாம். ஆதலால் அடுக்கு என்பது ஐந்து என்னும் எண்ணைக் குறித்தது. கை, பூட்டு என்பவை காண்க. அடுப்பில் காளான் பூத்தல் - சமைக்கவும் இயலா வறுமை

ஆம்பி, காளாம்பி, காளான் என்பன ஒரு பொருளன. காளான் குப்பையில் பெரிதும் உண்டாகும். ஆதலால் ‘குப்பைக் காளான்' எனவும் படும். நல்ல மண்பதத்தில் மழைக் காலத் தில் தோன்றக் கூடியகாளான் சமையல் செய்யும் அடுப்பில் முளைத்ததென்றால் என்ன காரணம்?

பல நாள்கள் அடுப்பில் நெருப்புமூட்டவில்லை. நெருப்பு எரிந்த கரியை அள்ளவில்லை. கூரை முகடு சிதைந்திருப்பதால் மழைநீர் வழிந்திருக்கிறது. ஆகவே ஆங்குக் காளான் தோன்றி யிருக்கிறது என வறுமையின் உச்சத்தை காட்டுவதாம். அடுப்பில் பூனை கிண்டுதல் என்பதுவும் இது.

அடுப்பில் பூனை கிண்டுதல் - சமைக்கவும் இயலா வறுமை

பூனை அழகு உயிரியாக மேலை நாட்டில் வளர்ப்பது உண்டாயினும், அப்பழக்கத்தை மேற்கொள்ளும் நம்நாட்டாரும் அதற்காக வளர்ப்பது உண்டாயினும், எலி பிடிப்பதற்காக வளர்ப்பதே பெரும்பான்மையாம். எலி சுவரைத் துளைத்துக் குடியிருக்கும். ஆனால் அடுப்பில் வளையமைத்துக் குடியிருக்குமா? பல நாள்கள் அடுப்பு மூட்டாமையால் அதையும் மற்ற மண்பகுதி போலவே கொண்டு எலி வளை தோண்டிக் குடியிருக்கின்றதாம். அதனைப் பிடிப்பதற்காகப் பூனை அடுப்பைக் கிண்டுகின்றதாம். வறுமைக் கொடுமையைச் சொல்லுவது இது.

அடைகாத்தல் - வெளிப்போகாதுவீட்டுள் இருத்தல்

கோழி முட்டையிட்டு இருபத்தொருநாள் அடை கிடக் கும். அடைவைத்த நாளில் இருந்து எண்ணிக் கொள்ளலாம். குஞ்சுபொரித்து வெளிப்படும் வரை அடை காக்கும் கோழி, தீனி