உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

இளங்குமரனார் தமிழ்வளம்

உதிர்த்தல் - மானங்கெடல்

1

"அவள் உதுத்துப்போட்டவள், எல்லாம் உதுத்திட்டுத் திரிகிறாள்” என்பவை ஒழுக்கமில்லாதவள்; மானங்கெட்டவள் என்னும் பொருளில் சொல்லப்படும் பழிப்புரை.

‘உதிர்த்தல்’ என்பது பூவுதிர்த்தல், காயுதிர்த்தல் போல இருப்பதை இழந்து விட்டதை உணர்த்துவதாம். பெண்மைக்கு உரியதெனக் கருதும் பண்புகளை இல்லாமல் செய்து விட்டவள் என்பதே ‘உதிர்த்தவள்' என்பதன் பொருளாம். ஆண்பாலுக்கும் இவ்வசை மொழியுண்டு " அவன் உதுத்துப் போட்டவன் என்பதும் வழக்கே. பருப்பொருள் உதிர்தலைக் குறித்த இது, பண்பு இழப்பைக் குறிப்பதாக வழக்கிற்கு வந்தது.

உரித்தல் - வைதல்

தோலை உரித்தல் என்பது வழக்கு. அதனால் தோலுக்கு உரி என்றும் உரிவை என்றும் பெயருண்டு. இவ்வுரித்தல் உடையை உரித்தல் என்பதிலும் உண்டு. இவற்றைக் கடந்தது மானத்தை உரித்தல் என்பது. மானம் ஒரு மூடுதிரை. அதனைக் கிழிப்பது, அகற்றுவது போல உரித்தல் வழக்கு வந்தது. இன்னும் மூக்கை உரித்தல் என்பதும் வழக்கு. மூக்கை உரித்தல் நாறவைத்தல் என்னும் பொருளது. இது வசை மொழியாதல் அறிக. நாறி னவன்(ள்) என்பது வசைப் பட்டம்.

உரித்துக் காட்டல் - வெளிப்படப் பேசல்

66

ஏனையா மூடிமூடிப் பேசுகிறாய்? உரித்துக் காட்ட வேண்டியது தானே! மானம் இருப்பவனுக்கு அல்லவா மறைத்துப் பேசவேண்டும். இவனை உரித்துக் காட்டினால் தான் தைக்கும்” என்பது வெளிப்படுத்தும் வேட்கையுரை. தோலை உரிப்பது போல உரித்துக் காட்டல்; உடையை உரிப்பது போல உரித்துக் காட்டல் என்பவை வெட்ட வெளியாகச் சொல்லல் என்பதாம்.

உருட்டுப்புரட்டு - ஏமாற்றுதல்

ஒருபொருளை உருளச் செய்தல் உருட்டு; அதனை நிலை மாறத்திருப்பிப் போடுதல் புரட்டு, உருளை இயல்பாக உருளும். அதனை உருளச் செய்தல் உருட்டு. தூண் உருளாது - அதனைக் கம்பியால் கோலிப் புரளச் செய்தல் புரட்டு. பொருள்களை உருட்டுதல் பூனை நாய் முதலியவை செய்யும். திருடர்களும் உருட்டிப் புரட்டி எடுத்துக் கொண்டு போவர். சில செய்தி

L