உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

இளங்குமரனார் தமிழ்வளம் 1

உலக்கை கொழுந்துவிடல் - நடவாதது நடத்தல்

உலக்கை உலர்ந்துபோன மரத்தால் செய்யப்படுவது. பட்டையும் பசையும் அற்ற அது தளிர்ப்பது எப்படி? கொழுந்து விடுவதுதான் எப்படி? நடக்கக் கூடியதன்று. வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தாலும் உலக்கை தளிர்க்கப்போவதில்லை. கொடாக்கையன் ஒருவன் ஒன்றைக் கொடுக்கக் கண்டால் உலக்கை கொழுந்துவிட்டது போல என்பர். குந்தாணி வேர் விட்டது, போல என்பதும் இத்தகையதே. குந்தாணி என்பது மரத்து உரல்.

உலுப்புதல் - பறித்துக் கொள்ளல், பலரையும் ஒருங்கு அழித்தல் மரத்தில் உள்ள காய்களை விழத்தட்டுதல் உலுப்புதல் எனப்படும். உதிர்த்தல் என்பதும் அது. 'புளியம்பழம் உலுப்புதல்' என்பது பெருவழக்கு. உலுப்பிய பின் மரத்தில் பூம்பிஞ்சு, பிஞ்சு, ஊதுகாய் அல்லது ஊதைக்காய், செங்காய், காய், கனி என்பன வெல்லாமும் இல்லையாய் உதிர்ந்து போம். கிளையை ஆட்டியோ கோல் கொண்டு அடித்தோ அலைக்கும் பேரலைப்பில் எல்லா மும் உதிர்ந்து மரம் வெறுமையாகிப் போம். அதுபோல் ஒரே வீட்டில் முதியவர் இளையவர் என்று இளையவர் என்று இல்லாமல் பலர் ஒரு நோயில் மாண்டு போனால் குடும்பத்தையே உலுப்பிவிட்டது என்பர். கொள்ளை நோய் விளைவு, பல குடும்பங்கள் உலுப்பப் படுதலாம்.

உள்ளாளி - நோட்டம் பார்ப்பவன், கூட்டுக் கள்வன்

உள்ளாள் மறைவாகவும் துணையாகவும் இருந்து பணி செய்யும் ஆள். அவன் உள்ளாளி எனவும் ஆவான். அவன் செயல் உள்ளாம். ஆளம்' ஆளின் தன்மை. எந்தத் திருட்டுக்கும் உள்ளாள் இல்லாமல் முடியாது என்பது, உள்ளாள் ஒருவன் துப்புத் தந்தால்தான் வெளியாள் துணிந்து புகுவான், வெளி யாள் புகுந்து திருடும் போது உள்ளாள் குறிப்புத் தருவான்; பாதுகாப்பு தருவான். “கள்ளாளியை விடு ஐயா. உள்ளாளியைக் கண்டுபிடி” தானே துப்புத்துலங்கும் என்பது வழக்கு.

ஊதிவிடல் - தோற்கடித்தல்

பொரிகடலையில் உள்ள உமியை மெல்லென ஊதினாலே பறந்து போய்விடும். நெல்லுமி புடைத்தலால் போகும். மணி பிடியாச் சாவி காற்றில் தூற்றுதலால் போகும். ஊதுதலால் அப்பால் போவது மெல்லுமியாகும். ஊதப் போகும் உமிபோல்

L