உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

இளங்குமரனார் தமிழ்வளம்

1

டு

வேண்டியவராக முன் வருபவர். “நாம் என்ன அப்படி வி விடுவது; நீங்கள் பாட்டுக்கு என் பின்னால் வாருங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன்” எனத் தலைப்பட்டுச் செய்வர். இத் தகையவர்கள் செயலை ‘எடுத்தாட்டுதல்' என்பது வழக்கு. அவ செயலைப் படுக்கப் போட்டுவிட்டார். இவர் அதனை எடுத்து ஆட விடுகிறார். ஆதலால் இவ்வாறு கூறப்படுகிறதாம். எடுத்தேறி - தனியே முயன்று செய்ய வேண்டிய வேலை

66

ஒட்டி ஒட்டி நிலம் இருந்தால் வேலை செய்தல், காவல் கண்காணிப்பு ஆகியவற்றுக்கு வாய்ப்பாக இருக்கும். ஒரு நிலத் திற்கும் மற்றொரு நிலத்திற்கும் இடைவெளி மிக்கு இருந் தால் போய் வரவே பொழுது மிகுதியும் செலவாகும். அதனால், எடுத்தேறிப் போய் வேலை செய்ய வேண்டியிருத்தலால் வேலை அரைபாதிதான் முடிந்தது என்பர். 'எடுத்தேறுதல்' என்பது இடைவெளிப்பட்டு முயன்று நிலத்தைச் சேர்ந்து வேலை செய்தல் என்னும் பொருள் தருதல் அறிக. எடுத்தேறப் பார்க்க வேண்டியிருப்பதால் அதனை விற்றுவிட்டு சேர்ந்தரணை நிலத்தை வாங்கிவிட்டேன்” என்பதில் இது மேலும் தெளிவாம். சேர்ந்தரணை ஒட்டியுள்ள இடம்.

-

எடுத்துவிட்டுக் குரைத்தல் - தூண்டித் தூண்டிச் செய்தல்

நாய்க்கு இயற்கை குரைப்பு. புதுவதாகத் தெரியும் காட்சி யும், புதுவதாகக் கேட்கும் ஒலியும் நாயை எழுப்பிவிட்டுக் குரைக்க வைக்கும். இனத்தைக் கண்டால் குரைக்கமாட்டா நாயும் குரைத்தல் பிறப்போடேயே வந்து விட்டது போலும்.

டு

சில நாய்கள் குரைத்து அச்சங் காட்டவேண்டிய இடத்தில் குரைக்காமல் கிடக்கும். அவற்றை உசுப்பிவிட்டு அல்லது தூக்கி விட்டுக் குரைத்தால் எப்படி இருக்கும்? ஒரு செயலைத் தானே விரும்பி உணர்வோடு செய்யாமல் தூண்டித் தூண்டிச் செய்பவன் செயலைப் பார்த்து, ‘எடுத்து விட்டுக் குரைப்பது என்னதான் செய்துவிடும்?” என்று எள்ளுவது உண்டு. எடுத்துவிடல் - புனைந்து கூறுதல்

உள்ளதை உள்ளபடி கூறாமல் இட்டுக்கட்டியும் பொய்யும் புளுகும் புனைந்தும் கூறுவது சிலர்க்கு மாறா இயற்கையாக இருப்பது உண்டு. அத்தகையவர், அவ்வாறு சொல்வதில் தமக் குள்ள தேர்ச்சியை எண்ணித் தாமே பூரிப்பதும் உண்டு. அதனைப் பாராட்டிக் கேட்பவரும் புகழ்ந்து பேசுபவரும்