உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

31

ன்

இருந்து விட்டால் கேட்க வேண்டியதில்லை. சுண்டைக்காயே அண்டத்தை அசைக்கும் கதையாகிவிடும், அத்தகையவன் செயலை ‘எடுத்துவிட்டான் பாருங்கள்' என்பவரும், 'நீ சும்மா எடுத்துவிடு’ என்பவரும் அவனைப் புகழ்பவர் போல் பழிப்பவர் என்பதை அவன் உணர்வானா?

எடுப்பு - வைப்பாள், வைத்தகுறி

-

L

எடுப்பு எடுத்தல், தனக்கென எடுத்து வைத்துக் கொள்ளல் எடுப்பாகும். தவறானச் செயலும் எடுப்பே; தவறான தொடர்பும் எடுப்பே, இரண்டையும் குறிக்க “நீ எடுத்த எடுப்புச் சரியில்லை” என்பர். எடுத்துக் கொண்ட ஒருத்தியைத் தன் பொறுப்பில் வைப்பதால் வைப்பு, வைப்பாள், வைப்பாட்டி ஆகிறாள். அவள் அவனுக்கு வைப்பாக இருப்பதுபோல அவள் வைத்ததெல்லாம் வரிசையாய் அவன் வைப்பெல்லாம் அவள் வைப்பாக ஆட்டி வைக்கிறாள். மூதாள்- மூதாட்டியாவது போல வைப்பாள் வைப் பாட்டியாவது நெறியே.

எடைபோடுதல் - மதிப்பிடுதல்

எடுத்தல் என்பது நிறுத்தல், எடுத்தலளவை, அறிக. நிறுக்க வேண்டுமானால் தூக்குதல் வேண்டும். ஆதலால் தூக்குதலும் ஆராய்தல் பொருள் தருவதாயிற்று. எடை போடுதலில் ‘இவ் வளவு' எனச் சரியான மதிப்பீடே முடிவு. அவ்வழக்கில் இருந்து, "கொஞ்சம் பேசினால் போதுமே! அவனை எடைபோட்டு லாம்” என வழக்கு மொழி தோன்றியது. ‘எடைபோடுதலில் மிகுந்த தேர்ச்சியாளன்' எனச் சிலர்க்குத் ‘தனிப்பேர் உண்டு.' எலியும் பூனையும்

L

பகை

எலியும் பூனையும் பகையானவை. பூனையைப் பெரிதும் வளர்ப்பதே, எலித் தொல்லையை ஒழிப்பதற்கே. ஆகலின் இரை யாம் எலியைப் பூனை பற்றுதல் அதன் இயற்கைத் தேவை. ஆயினும் எலி அழிகின்றதே. இதனைப் பார்த்தவர் எலியும் பூனையும் பகையானவை எனக் கருதினர். பகை என்பது ஒன் றொடு ஒன்று மாறுபடலும், போரிடலும் ஆனால் அன்றோ!, ன்று தாக்குகிறது, மற்றொன்று, தப்பியோட முயல்கிறது. தில் பகையென்ன யன்ன உள்ளது? ஆயினும் பகைக் கருத்தால் இணையாத இருவரைக் குறிக்கும்போது “அவர்கள் எலியும் பூனையும் போல இருக்கின்றனர்” என்கின்றனர். இவ்வழக்குச் சொல் பகைமைப் பொருள் தருவதாம்.