உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

என்னங்க கணவர்

இளங்குமரனார் தமிழ்வளம் 1

“என்ன அவர்களே" என்பது முடிந்த அளவும் தேய்ந்து என்னங்க' என வழங்குகின்றது. “அவர்கள்- அவன்கள்- அவங்க எனமாறும். என்னங்க என்பது, பெரியவர்களை மதித்து வினவும் வினாப் பொதுமையுடையது எனினும் அப்பொதுமை நீங்கி, மனைவி ஒருத்தி தன் கணவனைக் கூப்பிடும் கூப்பீடாக அமை கின்றது. 'என்னங்க உங்களைத்தானே' ‘என்னங்க, போகலாமா? என்பவற்றை அறிக. ‘அவங்க என்ன சொல்லுவாங்களோ' என்பதில் அவங்க' என்பதும் கணவனைக் குறிப்பதே. ‘அவர்’ காண்க. ஏரான் - முதலாக வந்தவன்

சற்றே முற்காலம்வரை திண்ணைப் பள்ளிகள் இருந்தன. அங்கே மாணவர்கள் ஒருவருக்கு முன்னாக ஒருவர் வந்து விடுதல் நடைமுறை. ஆசிரியர் வீட்டுத் திண்ணை அல்லது வீட்டின் பகுதியே பெரும்பாலும் பள்ளியாக இருப்பதுண்டு ஆதலால் நேரம் காலம் என்னும் மணிக்கணக்கில்லாப் பணியாளர் அவர், முதலாவதாக வருபவன் ஏரான். அவனுக்கு மட்டும் அடியில்லை, பின்னே வர வர அடிபெருகும். ஏரான் என்பது உழவின் வழிவந்த வழக்கமாகும். முன்னேர்க்காரன் ஏரான் எனப்படுவான், இவனோ முன் வந்ததால் ஏரான். ஏரானாக வருவதற்குப் போட்டி மிகக் கடுமையாக இருக்கும். நானே ஏரான் என ஒருவன் மகிழ்வோடு வர அவனுக்கு முன்னாக வந்த ஏரான் இருமிக் காட்டுவான்! அது இருமலா, இடியன்றோ! ஏலம்

மணம், இயலும் விலை

66

ஏலம், மணப் பொருள். அப்பொருளைக் குறியாமல் குழந்தையின் வாயை’ ஏலவாய்” என்பது மணக்கும் வாய் என்னும் பொருளதாம். கரும்பு இனிப்பு, வேம்பு கசப்பு எனப் பொருள் தருவது, போல ஏலம் மணப் பொருள் தருகின்றதாம். இனி ‘ஏலம் போடுதல்' என்பது வேறு. இயலும் என்னும் சொல் ஏலும் என்றாகி ஏலமாகியது. இயலுமட்டும் என்பது ஏலுமட்டும் என்றும், இயலாது என்பது ஏலாது என்றும் வருதல் அறிக. இயலும் விலைக்குக் கேட்டல் 'ஏலம்' எனப்படுகின்றதாம். ஏலத்தை எவ்வளவு குறைவாகவும் கேட்கலாம்; கூட்டியும் கேட்கலாம். பொருள் மதிப்பீடு கேட்பவர் இயலுமானதைப் பொறுத்ததே; போட்டி நிலையைப் பொறுத்ததே.