உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

53

மலும் போய்விடும். ஆனால் பழமென்றால் உடனே பயனாகி விடுமே! அக் கருத்திலேயே செயல் நிறைவேறி உடன் பயன் படுதலைப் பழம் என்றும், நிறைவேறாமல் தடைப்பட்டு நிற்பதைக் காயென்றும் சொல்லும் வழக்கமாயிற்று. பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தலைக் கூறும் திருக்குறளை அறிக.

கால்கட்டை போடுதல் - திருமணம் செய்வித்தல்

ரு

பள்ளிக்கு வராமல் தப்பியோடும் மாணவர்களுக்கு முன்பு கட்டைபோடும் வழக்கம் இருந்தது. குட்டை போடும் வழக்கமும் இருந்தது. கட்டை என்பது ஒரு சங்கிலி வளையத்தில் மாட்டப் பட்ட கட் கட்டை சங்கிலி காலில் மாட்டப்பட, கட்டையைத் தூக்கிக் கொண்டு நடக்கவேண்டியது. குட்டை என்பது இரு கால்களையும் உள்ளடக்கி உட்கார்ந்து கால் நீட்டிய நிலையிலே வைக்கும் துளைக் கட்டையாகும். ஓடும் மாடுகளுக்குத் தொங்கு கட்டை கழுத்தில் கட்டிவிடுவது இன்றும் வழக்கமே. இவ்வழக்கத்தில் இருந்து கட்டைபோடுதல் என்பது வந்ததாகலாம். கட்டை போட்டால் நினைத்தபடி திரியவோ ஓடவோ முடியாது. அதுபோல் திருமணம் செய்து விட்டால், கட்டின்றிக் திரிந்த காளைபோல்வான் கட்டுக்குள் அமைவான் என்னும் கருத்தில் திருமணத்தைக் கால் கட்டை போடுதல் என்பது வழக்கமாயிற்று. தளைபோடுதல் என்பதும் அது. கால்வழி – மக்கள்

மரம்

கான்முளை என்பதும் இப்பொருளதே. கால்வழி என்பது வாழையடி வாழையென வரும் மரபுத் தொடர்ச்சியாகும். கால் என்பதற்கு ஊன்றுதல் முளைத்தல் எனப் பலபொருள்கள் உண்டு. இங்குக் 'கால்' குடும்பத்திற்கு ஊன்றுதலாக வாய்த்த மக்களைக் குறித்து நின்றது. ஆலமரத்தில் அடி இருந்தாலும் கிளைகளில் இருந்து இறங்கும் வீழ்த்தும் ‘கால்’ ஆகி மரத்திற்கு உதவும். அதுபோல் கால் முளையும் குடியைத் தாங்கும். குடும்பத்தை வழி வழி நிலை பெறுத்தி வருபவர் மக்கள். ஆதலால் அவர்கள் கால்வழி கான்முளை எனப்பட்டனர் என்க. கால் வைத்தல் - வருதல், குடிபுகுதல்

கால் வைத்தல்; காலை நிலத்தில் அல்லது ஓரிடத்தில் வைத்தல் என்னும் பொருளில் விரிந்து 'வருதல் வருதல்' என்னும் பொருளில் வருவது வழக்காகும். “என்றைக்காவது எங்கள் வீட்டில் நீங்கள் கால் வைத்ததுண்டா?” என்று வினாவினால் வந்ததுண்டா என்பது பொருளாம்.