உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

இளங்குமரனார் தமிழ்வளம்

1

தருதல் விளையாட்டு காட்டுதல் பொம்மை தருதல் ஆகியவை செய்து ஏமாற்றித் தங்கள் விருப்பை நிறைவேற்றிக் கொள்வர். ஆதலால் காது குத்துதலுக்கு ஏமாற்றுதல் பொருள் ஏற்பட்டது. காது கொடுத்தல் - கேட்டல்

L

காது உறுப்புப் பொருள். முதலொடு கழற்றக்கூடாத உறவு (தற்கிழமை)ப் பொருள். கொடுத்தல் என்பது கொடுக்கும் உறவு (பிறிதின் கிழமை)ப் பொருள் - கொடாப் பொருளைக் கொடுக்கும் பொருளாகக் கூறப்படுதல் அறிக. இங்குக் காது என்பது அப்பொறியைக் குறியாமல், அதன் புலனைக் குறிப்ப தாக அமைகின்றது. அதாவது 'கொடுத்தல்' என்பது கேட் டலைக் குறித்தது. "நான் சொல்வதைக் காது கொடுத்துக் கேளேன் “காதைக் கொடுப்பதே இல்லை; பிறகு எப்படி விளங்கும்” என்பவை வழக்குச் செய்திகள். சருக்கரைப் புலவர் என்பார் “காசு கொடுத்துக் கேளாவிட்டாலும், காது கொடுத் தாவது கேட்கக் கூடாதா?” என்பார்.

L

وو

காய்தல் - பட்டுணியாதல். பசித்துக் கிடத்தல்

தீ

வெயில் காய்தல்; குளிர்காய்தல்; காயப் போடுதல் என்பவை எல்லாம் வெதுப்புதல் பொருளன. இக் காய்தல், கதிரோன், தீ, மின்சாரம் ஆகியவற்றால் ஏற்படுபவை. இவற்றை விடுத்துப் பசியும் தீயாகவும்; எரியாகவும், வழங்கப்படும். பசியைத் 'தீப்பிணி என்பதும் வழக்கே. தீ எரிப்பதுபோல் பசித்தீயும் எரிக்கக் கூடியது தானே' ‘உன்னைக் காயப்போட்டால்தான் சீராகும்' என்பதில் காயப்போடல் பட்டுணி போடலைக் குறித்தல் அறிக. “காய்ந்த மாடு, கம்பில் விழுந்தாற்போல்" என்னும் பழமொழியும் காய்தல் பசித்தலைச் சுட்டும். காயப் போடல் பொருளை 'ஒட்டக்காயப் போடல்' என்பது நன்கு தெளிவிக்கும் ஒட்டுதல் குடலுள் ஒன்றும் இன்றி ஒட்டிப்போதல், ‘ஒட்டகம்' ஒட்டிப்போன அகத்தையுடையது- பட்டுணி பன்னாள் கிடக்க வல்லது-என்னும் பொருளதாம் அது. காயா? - பழமா? தோல்வியா? வெற்றியா?

காய் முதிரா நிலை; பழம் முதிர்நிலை; ஒரு செயல் நிறை வேறலைப் பழுத்தல் என்பது குறித்தது. “தானே பழுக்காததைக் தடிகொண்டு பழுக்கவைத்தது போல” என்னும் பழமொழி பழத்திற்கு நிறைவேற்றல் பொருளுண்மை தெளிவிக்கும்.

காயைப் பழுக்க வைக்கப் பலவகை முயற்சிகள் வேண்டும்; காத்திருக்கவும் வேண்டும். காலத்தால் பயன் கொள்ள நேரா