உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

51

காடன்று; அழிகாடு! ஆம்! சுடுகாடு. சோலையாக இருப்பதை யும் பாலையாக மாற்றுவார் உண்மையில் அத்தகையரைக் காடாக்குவார் என்பது வழக்கமாயிற்றாம்.

மொழி.

கல்லுழி மங்கான் போன வழி காடுமேடு” என்பது பழ

காணாக்கடி - இன்னதென்று தெரியாத நச்சுயிரி கடித்தல்

கண்ணால் தெரியவராத 'கடி' ஏற்பட்டு விடுவதுண்டு. தேள், பாம்பு, நட்டுவாய்க்காலி, பூரான் இவற்றுள் இன்ன தெனத் தெரியாது எனின் அதனைக் காணாக் கடி என்பது வழக்கு.

"காணாக்கடி கடித்துவிட்டது; தீர்த்தம் குடிக்கவேண்டும்' என்று மஞ்சள் நீர் குடித்தல் வழக்கம். இத்தீர்த்தம் எல்லா வீட்டிலும் தருவதோ குடிப்பதோ இல்லை. நாக வழிபாடு, சக்கம்மாள் வழிபாடு செய்வார் வீட்டிலேயே வழங்குவர்.

காதில் பூச்சுற்றல் - அறிவறியாமை

மிகப்பழ நாள் வழக்கு காதில் பூச்சுற்றல். தலையில் பூச் சூடல் இன்னும் காணக்கூடிய பெருவழக்கு. கழுத்துச் சங்கிலி யிலோ கயிற்றிலோ பெண்கள் ‘பூச்சரம்’ சுற்றிக் கொள்ளல் நாட்டுப்புறங்களில் உண்டு. காதில் ஒற்றைப் பூவைச் சிலர் வைத்துக் கொள்ளலும் அரிதாகக் காணலாம். முற்காலத்தில் ஆண்களும் குடுமி வளர்த்தனர்; கொண்டை போட்டனர்; பூவும் சூடினர். தலையில் பூச்சூடியதுடன் காதிலும் பூச்சரத்தை ஒரு சுற்று சுற்றிக்கொண்டனர். அது ‘பழங்காலம்’ ‘படிப்பறிவில்லாத காலம்’ நிகழ்ந்தவை என்னும் கருத்தால் தற்காலக் கல்வி கற்றவர், என்னை என்ன காதில் பூச்சுற்றினவன் என்றா நினைத்துக் கொண்டாய்?' என்பது வழக்கமாயிற்று. கொண்டை முடித்தவன், சிண்டு முடித்தவன் என்பதும் இது.

காதுகுத்தல் - ஏமாற்றல்

காது குத்துதல்' பெருவிழாவாக இந்நாளிலும் நிகழ் கின்றது. இது பழமையான வழக்கம். காது குத்துதல் படிப்பறி வில்லார் செயல் எனப் படித்தவர்கள் எண்ணிய நிலையில் “என்ன காது குத்துகிறாயா? ‘அதற்கெல்லாம் வேறு ஆள் பார்த்துக்கொள்” என்பது வழக்காயிற்று.

காது குத்துதல் குழந்தைப் பருவத்தில் நிகழ்த்தப்படும் செயல். அதனைக் குழந்தை விரும்பாது. அதனைச் செய்வதற்குப் பெற்றோர்க்கு விருப்பம். ஆதலால் குழந்தைக்குப் பண்டம்