உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

கோழியாகக்கூவல் - ஓயாமல் அழைத்தல்

75

கோழி பொதுப் பெயர். சேவற் கோழி, பெட்டைக்கோழி என இருபாற் பெயராம். கோழி கூவிப்பொழுது விடிதல் நாளும் அறிந்த செய்தி. கோழி வைகறையில் எழுந்து தனக்கியல்பான சுறுசுறுப்பாலும் விழித்த குறிப்பாலும் கூவும். அதனைக்கேட்டு அண்டை வீடு அடுத்த வீட்டுக் கோழிகளும் கூவும். மாறி மாறி அவை கூவிக் கொண்டிருக்கும். அதில் இருந்து கோழியாகக் கூவல் என்பதற்குப் பன்முறை அழைத்தல், கூப்பாடு போட்டுக் கூப்பிடல் என்னும் பொருள்கள் எழுந்தன. "கோழியாகக் கூவுகிறேன்; என்ன என்று கேட்டாயா?" என்பது இடிப்புரை. சக்கட்டி - நொண்டி

ஒருகால், உரிய அளவினும் மற்றொருகால், சற்றே குட்டை அளவினும் இருப்பார், ஊன்றி ஊன்றி நடப்பர். அந்நடை சக்குச் சக்கென ஒலியுண்டாக நடத்தலால், அதனைச் சக்கட்டி என்பர். அச்சக்கட்டி நடை, அந்நடையுடையாரைக் குறிக்கும் நிலையில் வழக்குண்டு. அதனால் சக்கட்டி என்பதற்கு நொண்டி என்னும் பொருள் உண்டாயிற்று. “என்ன சக்கட்டி போடுகிறாய்" என நொண்டுவாரைக் கேட்பது வழக்கு.

சக்கைவைத்தல் - உறுதிசெய்தல்

மாட்டுத் தாம்பணிகளில் மாடு பிடிப்பவர்களிடம் ‘சக்கை வைத்தல்’ நிகழ்வு காணலாம். ஒருவர் மாட்டை, ஒருவர் விலை பேசுங்கால் அவ்விலை இவ்வளவுதான்; இதற்கு மாற்று இல்லை; என்பதற்கு அடையாளமாகத் தரகர்கள் சக்கை வைப்பர். ‘சக்கை’ என்பது வைக்கோல்; சக்கை செத்தை எனவும் படும். சில இடங் களில் புல்லைப் பறித்துக் கையில் தருதலும் உண்டு. அதனை வாங்கிவிட்டால் பேச்சு மாறக் கூடாது என்பது இரு பக்கத் துக்கும் உறுதியாகும். சக்கை வாங்கிவிட்டால் கட்டுப்பட்டு

நடத்தலைக் கடமையாகக் கொள்வர். சக்கை வைத்துவிட்டு மாறுதல் இழிவாக எண்ணப்படும்.

சங்கு ஊதுதல் - சாதல்

இறப்புக்கு அடையாளமாகச் சங்கு ஊதுவதும், “சேகண்டி அடிப்பதும் நடைமுறையில் உள்ளன. கோயில் விழாவிலும் இவை உண்டு எனினும் 'சங்கு ஊதிவிட்டார்கள்' என்றால், சாவாகிவிட்டது; தூக்கப்போகிறார்கள்” என்பதற்கு அடை யாளமாக விளங்குகிறது. ஆதலால், சங்கு ஊதுதல் சாவின்

66