உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

89

குளம்பி (காஃபி) கோகோ, சுவை நீர் (போன்விட்டா) முதலிய வாம். இவற்றுள் முன்னவை இரண்டும் பெருவழக்கில் உள் ளவை. எங்கும் கிடைப்பவை, அடிக்கடி குடிப்பவை. அவற்றைக் குடிப்பது சூடேற்றலாக வழக்கில் உள்ளது. சூடுபோடுதல், சூடுவைத்தல், சுடுதல் என்பவை இல்லாமல் சுடு நீர்க்குடிகளைக் குடிப்பது சூடேற்றலாக வழங்கப்படுவது வழக்குச் சொல்லாம். 66 சூ டேற்றி விட்டு வந்து பார்க்கலாம் வாருங்கள்’ என்பது அலுவலக உரையாடற் செய்தி.

சொங்கி - உள்ளீடு இல்லாமை, வெறுமை.

சோளத்தின் மணியை ஒட்டிக் கொண்டிருக்கும் மூடியைச் சொங்கு என்பது வழக்கம். மணியொடு பிரியாமல் சொங்கு இருப்பது, சொங்குச் சோளமாம். பால் பிடிக்காமல் மூடித ழோடு ஒட்டியிருக்கும் சோளமும் சொங்கு எனப்படும். அச் சொங்கு உள்ளீடு இன்மையால் சோற்றுக்குப் பயன்படாது. தூற்றும்போதே காற்றில் அப்பால் போய் விழும். சிலரை அவர்தம் சோம்பல் செயற்பாடு பயன் ஆகியவை கருதிச் சொங்கி என்பது வழக்கு. 'சொங்கிப் பயல்' 'சொங்கித்தனம்' என்பவை சொங்கியின் வழக்கினைத் தெரிவிக்கும். சொங்கில் இருந்து வந்ததே சொங்கி என்க.

சொல்விளம்பி - கள், சாராயம்

குடியர்கள் கள்ளைச் சொல்விளம்பி என்பர் என்பது லக்கண நூல்களில் சொல்லப்படும் “குழுஉக்குறி”

குழூஉ ஆவது கூட்டம். இவண் குடியர் கூட்டம். அவர்கள் தங்கள் குடிப்புப் பொருளுக்குச் சொல்விளம்பி எனப் பெயரிடு வானேன்?

குடித்தவன் தன் மனத்திலுள்ளதையெல்லாம் தன் மதி மயக்கத்தில் கொட்டித் தீர்த்து விடுவான். அவன் அவ்வாறு சொல்ல இட டமாக இருப்பது மதுவே ஆதலால் அதனை அப்பெயரால் குறித்தானாம். குடித்தவனுக்கு மதிமயக்கம் இருக்கும்போதுதான் சொல்வதை அறிய மாட்டானே எனின், குடித்து மயங்குபவனை அவன் பாராதவனா என்ன? சோங்கு - உயர்தல்

66

இந்த மரம் சோங்காக இருக்கிறது” என்பதும், “நல்ல சோங்கான ஆள் ஆள்” என்பதும் வழக்கில் உள்ளவை. சோங்கு