உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

இளங்குமரனார் தமிழ்வளம்

தலையில் அடித்தல் - உறுதி கூறல்

1

'தலையில் அடித்துச் சொல்கிறேன்' என்றால் உறுதி மொழிகிறேன் என்பது பொருள். உறுதி மொழிவார் துணியைத் தாண்டல், பிள்ளையைத் தாண்டல், தெய்வத்தின் மேல் ஆணை கூறல், கையடித்தல், தலையில் அடித்துக் கூறல் நெஞ்சில் கை வைத்துக் கூறல் என்பனவெல்லாம் வழக்கில் உள்ளவை. வாக்கை மட்டும் உறுதியாக்காமல், மற்றோர் உறுதியையும் கொண்டது இது. “தலைதொட்டேன்” எனவரும் இலக்கிய ஆட்சி தலையில் அடித்து உறுதிகூறல்" பழமையை உரைக்கும்.

66

சால்லவா” என்றால் உறுதி

தலையில் அடித்துச் சொல்லவா சொல்லவா என்று வினாவுதலாம்.

தலையைக் குலுக்கல் - மறுத்தல்

தலையாட்டுதலுக்கு எதிரிடையானது தலையைக் குலுக்கு தலாம். தலையாட்டல் என்பது ஒப்புகை, தலையைக் குலுக்கல் என்பது மறுதலிக்கை.

ஆட்டுதல் என்பது ஒரு முறை இரு முறை தலையசைத்த லாக அமையும். குலுக்கல் பல்கால் அசைத்தலாக இருக்கும். ‘ஊம்' என்பது ஏற்றுக்கொள்ளலையும் ‘ஊகூம்' என்பது ஏற்றுக் கொள்ளாது மறுத்தலாக இருப்பதையும் அறிக.

நீ

"தலையாட்டிக்கெட்ட நீ இப்பொழுது ஏன் குலுக்கு கிறாய்" என்பதில் ஆட்டல் குலுக்கல் இரண்டன் பொருளும் தெளிவாம்.

தள்ளமாட்டாமை - அகற்ற முடியாத நெருக்கம்

ஒருவரைச் சார்ந்து ஒருவர் இருப்பார். அவரைத்தம்மால் தாங்கக்கூடிய வளமும் வாய்ப்பும் இல்லாவிடினும் அல்லலோடு அல்லலாக அவரைத் தாங்கித் தீரவேண்டிய கட்டாய நிலையை உண்டாக்கி இருக்கும். தள்ளிவிட நினைத்தாலும் அவ்வாறு தள்ளிவிட முடியா நிலைமை இருத்தல், தள்ளமாட்ட ஆயிற்று. தள்ளிவிட்டால் கெட்டழிந்து போகவேண்டிய கட் L டாயம் ஏற்படும் என்னும் உறுதியால் தள்ளாதிருக்க நேர் கின்றதாம்.

தள்ளிவைத்தல் - ஒதுக்கிவைத்தல்

ாமை

தள்ளிவைத்தல் என்பது இருவகையாக வழக்கில் உள்ளது. ஊரொடு ஒத்துப்போகாதவரை அல்லது ஊரை எதிர்த்து