உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

95

அவ்வாறு தலையைத் தடவி அன்பை வெளிப்படுத்துவதுபோல் மயக்கித் தம் தேவையை நிறைவேற்றிக் கொள்ளலும் தலை தடவலாக வழங்குவதாம்.

தலை தடவல் என்பதில் மற்றொரு பொருளும் உண்டு. தலையை முழுக்கத் தடவி மழிப்பதுபோல உள்ளவற்றை யெல்லாம் பறித்துக் கொள்வதாம்.

தலை முழுகல் - தீர்த்துவிடல், ஒழித்துவிடல்

சிக்கு அழுக்கு ஆகியவற்றைப் போக்க தலை முழுகுதல் தமிழர் வழக்கம். ‘எண்ணெய் தேய்த்துச் சீயக்காய் தேய்த்து நீராடல் வாரத்திற்கு ஒரு முறை கட்டாயமெனவும் திட்டப் படுத்தியுள்ளனர். இத்தலை முழுகல், முழுகுதலைக் குறியாமல் தலை முழுகுதலால் உண்டாகும் (அழுக்குப்) போக்குதல் விலக்குதல் - பொருளைக் கொண்டு வழக்கத்தில் உள்ளதாம்.

“உன்னைத் தலைமுழுகிவிட்டேன்” என்று ஒரு கணவன் மனைவியைச் சொன்னால் உன்னைத் தீர்த்துவிட்டேன் என்பது பொருளாகும். இனி, ஒருவர் இறந்தால் நீரினில் மூழ்கி நினைப் பொழிதல் உண்மையால் ஒழித்துவிடல் பொருளும் அதற்கு

உண்டாம்.

தலையாட்டிப் பிழைப்பு - ‘ஆமாம்’ ‘ஆமாம்’ என்று சொல்லிப் பிழைத்தல்

தன்னலம் நாடும் ஒருவன் எவர் என்ன சொன்னாலும் 'ஆமாம் ஆமாம் என்று சொல்வதை அன்றி மறுப்பதே இல்லை. ஆமாம் என்பதை வாயால் சொன்னாலும் சொல்லா விட்டாலும் தலையாட்டலை மறவார். அதனால் அத்தகையவர் தலையாட்டி எனவே பட்டப்பெயர் பெறலும் உண்டு. கோயில் மாடுகளுக்குத் தலையாட்டும் பயிற்சி தந்து என்ன சொன்னாலும் தலையாட்ட வைப்பார் உளர். அம்மாடு போலத் தலையாட்டு வாரைத் தலையாட்டிப் பொம்மை, ‘ஆமாம்சாமி' என்பதும் வழக்கே. தஞ்சாவூர்ப் பொம்மை, தலையாட்டிப் பொம்மைச் சான்று. தலையிடுதல் - பங்கு கொள்ளல்; ஊடுபுகுதல்; தீர்த்துவைத்தல்

66

எங்களுக்குள் ஆயிரம் இருக்கும் நீங்கள் இதில் தலையிட வேண்டியதில்லை” என்பது, பங்கு கொள்ளவேண்டா, ஊடுபுக் வேண்டா என்னும் பொருளாக அமையும். “நீங்கள் தலை யிட்டால் அல்லாமல் சீராகாது” என்பதில் தலையிடுதல், தீர்த்து வைத்தல் பொருளதாக அமைகின்றது. தலையிடுதல் தலையீடு என்றுமாம். தலையீடும் இப்பொருள் கொள்வதே.