உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

இளங்குமரனார் தமிழ்வளம் 1

ஆனால் முந்நூறு வீடுகள் கூட அவ்வூரில் இரா. இரண்டு மூன்று தலைக்கட்டுகளும் ஒரு குடும்பத்தில் இருத்தலுண்டு.

தலைகவிழ்தல் - இழிவுறுதல்

ஒருவர் செய்த பிழையைச் சுட்டிக்காட்டும்போது, சுட்டப் பட்டவர் மானியாக இருப்பின் அவர் தலைகவிழ்தல் இயற்கை. தலைகவிழ்தல் என்பது இதனால் இழிவுப் பொருள் தருவ தாயிற்று. புகழமைந்த மனையாள் இல்லாதவனுக்கு ஏறுபோல் பெருமிதமாக நடக்கும் நடை இல்லை என்றார் திருவள்ளுவர். ஏறுபோல் நடையாவது தலையெடுத்து நிமிர்ந்து செல்லும் நடையாம். களவு கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளியாக ஊர் மன்றத்தில் நிறுத்தப்பட்டவன் தலைகவிழ்ந்து காலால் நிலங் கிளைத்தலைக் குறித்துக் காட்டும் கலித் தொகை. “தலைகவிழ வைத்துவிட்டாயே!" என்று தம் தொடர்பாளர் செய்த குறைக் காகப் புண்படுவார்கூறுவரெனின் தலைகவிழல் இழிவு நன்கு புலனாம். ஒரு செயலைச் செய்யும் வகையால் செய்யாது கெடுத் தால், தலைகீழ் ஆக்கிவிட்டான் என்பதும், மாறாக நடத்தல் தலைகீழாக நடத்தல் என்பதும் வழக்கு.

தலைகாட்டாமை - முன்வராமை

தலை என்பது உறுப்பைக் குறியாமல், உறுப்புடையானைக் குறிப்பதாம். தலைக்கு இரண்டு என்றால் ஆளுக்கு இரண்டு என்பது போன்ற வழக்கு உடையதாகும் இது.

பல நாள் பார்க்காதிருந்த ஒருவரைப் பார்க்க நேர்ந்தால் “தலையைக் காணவில்லையே; வெளியூர் போயிருந்தீர்களா?” என வினவுதல் பெரும்பான்மை. “நீ செய்த செயலுக்கு என் முன் தலைகாட்ட எப்படித்தான் முடிகிறது?” என்று வருந்துவதோ, 'தலைகாட்டினாயோ பார்” என எச்சரிப்பதோ வழக்கில்

66

உள்ளவையே.

தலைதடவல் - சுரண்டுதல், முழுவதும் பறித்தல்

தலையில் ஈரும் பேனும் சேர்ந்துவிட்டாலும் அழுக்குப் பிடித்து விட்டாலும் தலையைச் சொறிய அல்லது சுரண்ட நேரும். கையால் தலையைத் தடவுவதுடன் விரல்களால் சொறிந்து தினவைப்போக்கிக் கொள்ளல் காணக்கூடியதே. இத்தலை தடவலில் சுரண்டுவதும் உண்ட ாகலின் பிறர் செல்வத்தைச் சுரண்டுவதைத் தலைதடவலாகக் கூறும் வழக்கம் உண்டாயிற்று. இனித் தலையைத்தடவல் அன்பின் அடையாளம்.