உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

97

நிற்பவரை ஊரவர் தள்ளிவைப்பது ஒரு வகை. அவரும் அவர் குடும்பத்தவரும் ஊரொடு தொடர்பு கொடுக்கல் வாங்கல் எதுவும் செய்யமுடியாமல் தடுத்து நிறுத்தப்படுவர் என்பது அது. கணவன் மனைவியரிடையே கருத்து வேறுபாடு உண்டா னால் ஒருவரை ஒருவர் தள்ளிவைப்பதும் உண்டு. இது, நாளில் சற்றே பெருகிவருவது புலப்படுகின்றது. மகளிர் ஆட வரைத் தள்ளிவைப்பதும் அரிதாகத் தோன்றுகின்றது.

தளுக்குதல் - நடிப்பால் மயக்குதல்

6

து, இந்

தளுக்கு என்பது உடலை வளைத்தலும் நெளித்தலுமாம். உடலை வளைத்தும் நெளித்தும் இயற்கைக்குப் பொருந்தா வகையில் குழைவர் சிலர். அவரைத் தளுக்குபவராகக் குறிப்பர். இந்தத் தளுக்குடன் அணிகலம் ஆடை பூச்சு புனைவு எல்லாம் காட்டிப் பசப்புபவரும் உண்டு. அதனை மினுக்குதல் என்பர். “இந்தத் தளுக்கும் மினுக்கும் எவரைக் கெடுக்கவோ?” எனப் பார்த்த அளவானே கூறுவது உண்டு. அதற்கு மயங்கி அழிபவர் களும் பலப்பலர். தளுக்குதலும் மினுக்குதலும் உடையவர் மயங்க வைத்துத் தம் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளும் வஞ்சகர் என்க. இவைபாற் பொதுவின எனினும், பெண்டிரைப் பற்றியே பெருவழக்காக உள்ளது.

தளைபோடுதல் - திருமணம் செய்வித்தல்

கழுதைக்குத் தளைபோடுதல் வழக்கம். முன்னங்கால் இரண்டையும் சேர்த்துத் தளைத்து விட்டால் அது ஓடிப் போகாது. போனாலும் எளிதில் கண்டுபிடித்துக் கொள்ளலாம். தளை யாவது கட்டு. ஒருவன் வீட்டில் கட்டுப்பட்டு இருப்பதற்கு வழி தாலி கட்டி திருமணம் செய்துவிடுவது என்ற கருத்தால் தளை போடுதல் என்பது திருமணத்திற்கு ஆகியது. கட்டிக் கொள்ளு தல், தாலி கட்டுதல், கட்டிய மனைவி என்பவற்றில் வரும் கட்டுதல் திருமணத்தைக் குறிப்பதாம். மனைவியை நினைத்து ஊர்வழி சுற்றாமல் வீடு தேடிவருவதற்கு உதவியாகத் திருமணம் இருப்பதைக் கருதித் தளைபோடுதல் என்பது வழக்காயிற்று.

தறிகெட்டவன் - நிலைத்து ஓரிடத்து அமையாதவன்

தறி என்பது தூண். தறியில் மாடு கன்று யானை முதலியன கட்டப்பெறும். மாடு கட்டும் தறி கட்டுத்தறி. கட்டுத்துறை எனவும் வழங்கும். தறி போடுவதற்கும் அடிப்படை தறியே. அப்பெயரே அத்தொழிற்பெயராக

அமைந்தது.

தறி