உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

இளங்குமரனார் தமிழ்வளம் – 1

நிலைபெறுதல் பெற்றமையால், நிலை பெறாமல் திரிபவனைத் தறி கெட்டவன் என்பது வழக்காயிற்று. பாவு, மிதி, அசை ஆகியவை தறியில் அசையும். தறி அசையாது நிற்கும்.

தன் காலில் நிற்றல் - பிறர் உதவி கருதாதிருத்தல்

ஒருவர் தன் காலில் தான் நிற்பார். அவ்வாறு தன் காலில் நிற்பதைக் குறியாமல் தன் முயற்சியால், தன் துணிவால், தன் பொருளால் வாழ்வதே, அல்லது பிறரை எதிர் நோக்காமல் வாழ்வதே தன் காலில் நிற்றலாகக் கூறப்படுவதாம். ஆதலால் தன் காலில் நிற்றல் என்பது பிறரை எதிர்பாராது வாழும் வாழ்வைக் குறிப்பது அறிக.

கால் என்பது ஊன்றுதல். ஊன்றி நிற்கத் தன் கால் உதவுமே யன்றி ஒட்டுக்கால் உதவி எப்படியும் ஒட்டுக் காலாகத்தானே இருக்கும்? ஒட்டுக்காலில் நிற்கவே ஆகிவிட்டால் தன் காலில் நிற்கவே முடியாதே!

தாட்டிகம் - வலிமை, வல்லாண்மை

66

தாள் என்பது முயற்சி, வலிமை ஆகிய பொருள் தரும் சொல். தாட்டிகம் என்பது பிறரை அடக்கி ஆளலும், பிறர்க்கு மேம்பட நிற்றலுமாகிய தன்மை குறித்து வழங்கும் சொல்லாக உள்ளது. அவன் தாட்டிகமானவன் என்பதில் வலிமைப் பொருளும், “அந்தத் தாட்டிகன் போய்விட்டான் ஊரே வைத்த வன் வரிசையாகிவிட்டது து என்பதில் வல்லாண்மைப் பொரு ளும் உண்மை புலப்படும். இவ் வல்லாண்மை வழிப்பட்டதே தாட்டிகம் ஆகும். வன் கொடுமை வழிப்பட்டது அன்று. சிலர் அடாவடித்தனம் செய்வது தாட்டிகம் எனப்படாது என்க. தாடியைத் தடவல் - கவலைப்படல்

சில உணர்வுகள் சில செய்கைகளால் வெளிப்படும். அவ்வாறு வெளிப்படுத்துவனவற்றுள் ஒன்று தாடியைத் தடவ லாம். தாடி இல்லாதவர் தாடையைத் தடவல் அவ்வகைத்தே. இழப்புக்கு ஆட்பட்டவர் செயலோடாத நிலையில் இருந்து தலையைப் பிடித்தல், நாடியைத் தடவல் ஆகிய செயல்களைச் செய்வர். அதனால் எவரேனும் காலைக்கட்டி உட்கார்ந்தாலும், தாடியைத் தடவினாலும் “என்ன கப்பல் கவிழ்ந்துவிட்டதா?' என்பர். "தாங்காத இழப்புக்கு ஆட்பட்டவர் செயலை ஏன் செய்கிறாய்” என்பது வினவற் பொருளாம்.