உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

தாயமாட்டல் - காலங்கடத்தல்

99

தாயமாவது சூது. அது, இழக்க இழக்க மேலும் ஆர்வத்தை ஊட்டி ஆ ஆடவைப்பது. இழந்ததை மீட்டுவிடலாம் மீட்டு விடலாம் என்றே மேலும் மேலும் இழக்கச் செய்வது சூதா கலின், அதில் ஈடுபட்டவர் பசியறியார்; தொழிலறியார்; குடும்ப நிலையறியார்; வீட்டில் நோயார் இருப்பினும், இறப்பே நேரி னும் எண்ணிப்பாரார்; அத்தகைக் கொடுமை வாய்ந்தது சூது. ஆதலால் குடியைக் கெடுக்கவேண்டுமாயின் தாயம் ஆட வைத்து விட்டால் போதும், தாமே தம் குடியைக் கெடுப்பார். தாயம் ஆடவைத்தல் ‘தாயமாட்டல்’ என்க. ஆடல் வேறு; ஆட்டல் வேறு; அறிக.

தார்போடல் - தூண்டிச் சுறுசுறுப்பாக்கல்

தார் என்பது இரும்பாலாய கூர்முள். அதனைத் தன்னிடம் கொண்டது தார்க்குச்சி, தார்க்கம்பு, தார்க்கோல், தார் எனப்பல பெயர்களைப் பெறும். தார் போட்டுக் குத்தி அச்சுறுத்தி மாட்டை ஓட்டுவது வழக்கம். ஆதலால் தன்னியல்பாக நடக்கும் மாட்டை விரைந்தோட்ட உதவுவது தார் ஆகும். அத்தார் போலச் சிலரைச் செயலாற்ற வைக்கும் சொல்லும் 'தார் போடல்' என்னும் வழக்கில் வந்தது. அவனைத் தார் போடாமல் கிளப்ப முடியாது; "தார் போட்டாலே என்ன என்று கேட்காதவன், இப்படி நயமாகச் சொல்வதைத் தானா கேட்கப் போகின்றான்” என்பர். “தார்க்குத்தையும் பார்த்துவிடுவோம் என மாடுகள் இருப்பது போல இருப்பவரும் இருத்தல் கண் கூடே.

தாளம்போடல் - அடித்தல்

தாளம், தாள் என்பதில் இருந்து தோன்றினாலும், பின்னர் கால் தாளம், கைத் தாளம் என இரண்ட ாக விரிந்த தாம். கால் தாளம் உதைத்தலால் உண்டாவது. கைத்தாளம் குட்டுதல், அடித்தல், அறைதல், இழுத்தல் ஆகியவற்றால் உண்டாவது. "ஒழுங்காக இருக்கிறாயா? தாளம் போடவா?” என்றால், அடிக்கவா மிதிக்கவா என்னும் பொருளில் வருவதாம். ‘அத்தாளம்' என்பது வேறொரு வகையது. அல் - இரவு, தாலம் சோறு. அற்றாலம், இரவுணவு. 'தாளம்' என்பதற்கு அடி என்னும் பொருள் வந்த பின் ‘அத்தாளம்' எனச் சிதைவடைந்த சொல்லுக்கும் அப்பொருளே வழக்கில் வந்துவிட்டது. அத் தாளம் என்பது அடி.