உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

இளங்குமரனார் தமிழ்வளம் 1

தாளம் போடல் - வறுமைப்படல்

தந்தனாப் போடல் போல்வது தாளம் போடல் என்பது. தாளம் போட்டுக்கொண்டு பிச்சை எடுப்பாரைப் பார்த்தால் இதன் பொருள் விளங்கும். சிலர் தங்கள் வயிற்றிலும் மார்பிலும் தாளிலும் தாளம் போட்டுக் கொண்டு இரப்பது கண்கூடு. தாள் என்பது காலடி. காலடியால் அளவிட்டு உண்டாக்கியது தாள மாயிற்றாம். திண்டில் இருந்து ஆடிப்பாடி இரத்தல் திண் டாட்டம் ஆகும்.

தான்தோன்றி - சொல்வார் சொற்கேட்டு நடவாதவன்

'தான்தோன்றி' யப்பர் எனச் சிவபெருமான் பெயர் சில கோயில்களில் உண்டு. இலிங்க உரு எவரும் செய்துவைக்காமல் நிலத்தை அகழுங்கால் வெளிப்பட்டதாகவோ, கல்லின் அமை தியே இலிங்க வடிவு உடையதாகவோ இருந்தால் இப்பெயர் அதற்கு வழங்கப்படும். அது தான்தோன்றி எனப்படுவதுபோலத் தனக்குத் தோன்றியதே சரி; பிறர் சொல்வதைப் பற்றிக் கருதுவது என வாழ்பவரும் உளர். அவரைத் தான்தோன்றி என்பது வழக்கு. தனக்குத் தோன்றுவதே தோற்றமாகக் கொண் தான்தோன்றி. தான்தோன்றித்தனம் என்பது வின்மையைக் குறிக்கும் வசையாகவும் வழங்குகின்றது. திண்டு - வஞ்சம்

ல்லை

வன்

அறி

திண்டு என்பது தலையணை, திண்ணை போன்றதைக் குறிக்கும். ‘திண்டு தலையணை' என்பதில் திண்டு மெத்தையைக் குறிக்கும். திண்ணையில் சாய்ந்துகொள்வதற்காகத் திண்டு அமைப்பதும் வழக்கு. திண்டுக்கு முண்டு என்பதில் எதிரிடைப் பொருள் தரும். ஆனால் இத்திண்டு வேறுபட்டது. “அவன் மனத்தில் ஒரு திண்டு இருக்கிறது. அதனால் கலகலப்பாகப் பேசுகிறானா பாருங்கள்” என்பதில் திண்டு என்பதற்கு வஞ்சம் அல்லது கரவு என்னும் பொருளுண்மை வெளிப்படும். திருநீறு பூசுதல் - உணவு முடித்தல்

சிவநெறியர், உணவு காள்ளுமுன் திருநீறுபூசுதல் வழக்கம். அதனால் ஒருவர் திருநீறு பூசியிருந்தால் உணவை முடித்துவிட்டார் எனப் பொருள் செய்வது வழக்கம். இதனால் வாயாலேயே விருந்து செய்துவிடும் தேர்ச்சியுடையவர்கள். “திருநீறு பூசியிருக்கிறீர்கள். சாப்பாடு முடிந்துவிட்டது போலும் என்று பேச்சை முடித்துக் கொள்வர். "இல்லை இல்லை நீறில்லா நெற்றிபாழென்பதறிந்து பூசினேன்; உண்டேனில்லை;