வழக்குச் சொல் அகராதி
117
எனவும் அறியாமையால் மதிப்பாராயினர். அதனால் பட்டணம் நாகரிகம் எனப்பட்டது.
பட்டிக்காடு - நாகரிகம் இல்லாமை
நகரத்திலிருந்து நாகரிகம் வந்தது என்பது மேலைநாட்டு முறை. 'சிற்றிசன்' என்னும் ஆங்கிலச் சொல்லும் 'சிற்றி' என்னும் நகரில் இருந்து வந்ததே. ஆனால் பழங்காலத் தமிழ் நாகரிகம், புறப்பொருள் வளர்ச்சி கருதாமல் அகவுணர்வு கருதியே வழங்கப் பெற்றதாம்.
படித்தவர்களும், செல்வச் செழிப்பானவர்களும், ஆளும் பொறுப்பாளர்களும் நகரத்தில் வாழ்ந்ததாலும் அல்லும் பகலும் உழைப்பவரும் நிலத்தை நம்பி வாழ்பவர்களும் பட்டிகளில் வாழ்ந்தமையாலும், அவர்களுக்குக் கல்வி என்பது கைக்கு எட்டாப்பொருளாகப் படித்தவர்களும், பதவியாளர்களும் மேட்டுக் குடியினரும் செய்துவிட்டமையாலும் பட்டிக்காடு என்பது நாகரிகம் இல்லாமைப் பொருள் தருவதாயிற்று. பட்டை கட்டல் - இழிவுபடுத்துதல்
பட்டை என்பது மட்டையின் திரிபு, பனைமட்டை, தென்னைமட்டை என்பனவற்றையும், மடல் என்பனவற்றையும்
நினைக.
பதனீர் பட்டையில் குடித்தல் வழக்கு. பனை ஓலையை விரித்து மடித்துக் குடையாக்கிக் குடித்தல் நடைமுறை - முன் னாளில். இந்நாளில் கூடக் காட்டுவேலை செய்வார் பனையின் க் பட்டையில் கஞ்சி குடித்தல் உண்டு. பனங்குடையில் (பட்டை யில்) ஊனூண் வழங்கிய செய்தி புறப்பாடல்களில் உண்டு. பதனீர் குடித்துப் போடப்பட்ட பட்டையை எடுத்துக் கழுதை வாலில் கட்டி வெருட்டல். சிறு பிள்ளையர் விளையாட்டு, அதன் வழியே பட்டைகட்டல் இழிவுப் பொருளுக்கு ஆளாயிற்று. பட்டை தீட்டல் - ஏமாற்றுதல், ஒளியூட்டல்
விட்ட
அவனை நம்பினை; அவன் நன்றாகப் பட்டை தீட்டி ான்" என்பது ஏமாற்றிவிட்டான் என்னும் பொருளில் வழங்குவதாம்.
"பட்டை நாமம் பரக்கச் சார்த்தல்; கொட்டை நாமம் குழைச்சிச்சார்த்தல்” என்னும் பழமொழியும் ஏமாற்றை விளக்கு
வதாம்.