உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

மருந்து குடித்தல் - நஞ்சுண்ணல்

143

மருந்து என்பது நோய் நீக்கப் பொருள். அதுவே உயிர் காக்கும் பொருள். ஆனால் உயிர் போக்கும் நஞ்சும் மருந்து எனப்படுவது வழக்கு. “அவள் மருந்து குடித்துவிட்டாள்' எனின் நஞ்சுண்டு விட்டாள் என்பது பொருளாம். “இப்படியே நீ துயரப் படுத்தினால் நான் ஒரு நாளைக்கு மருந்து குடித்துச் சாகத்தான் போகிறேன்” என்பதும் மனச்சுமை தாங்காமையால் வெளிப் படும் செய்தியாம். அவர்கள் துன்ப நீக்கத்திற்கு அடிப்படையாக ருப்பதால் அதனையும் மருந்து என்பர் போலும் ‘சாவா மருந்து’ என்னும் குறளுக்கு 'நஞ்சுப் பொருள் தருவதும் கருதத்தக்கது. மல்லாத்தல் - தோற்கச் செய்தல்

குப்புறத்தள்ளல், மண்ணைக் கவ்வவைத்தல் என்பவை தோற்கச் செய்வதன் அடையாளமாக இருப்பதுபோல, மல் லாக்கக் கிடத்துதலும் தோற்க வைத்ததன் அடையாளமாகக் கருதப்படுகின்றது. ஆமையை மல்லாக்கக் கிடத்தினால் அரும் பாடுபட்டே திரும்பி ஊர முடிவது எண்ணத்தக்கது. முதுகில் மண்படல் குத்துச் சண்டையில் தோல்விப்புள்ளியாகக் கருதப் படுதலும் எண்ணத்தக்கது. குப்புறத்தள்ளிக் குதிரை ஏறல் போல, மல்லாக்கக் கிடத்தி மானங் கெடுத்தலும் வழக்கிடை அறியக் கூடியதே. “என்னை மல்லாத்தி விட்டு நீ போகவா பார்க்கிறாய்?” என்னும் வஞ்சின மொழி இதன் பொருள் விளக்கும். மழுக்கட்டை - அறிவுக்கூர்மையில்லாதவன், மானமற்றவன்

மழுங்கல், மழுங்குணி, மழுக்கட்டை, மழுக்கட்டி என்பன வெல்லாம் ஒரு தன்மையவே. மழுங்கல் என்பது கூரற்ற தன்மை. கூர்மை இரண்டு வகையாம். ஒன்று அறிவுக் கூர்மை; மற் றொன்று மானக் கூர்மை. ருவகைக் கூர்மை இல்லாமை மழுக்கட்டையாக வழங்கப்படுகின்றது. “அவன் மழுக்கட்டை எதைச் சொன்னாலும் அவனுக்கு ஏறாது” என்பது அறிவுக் கூர்ப்பின்மை “சூடு சொரணை இல்லாத மழுக்கட்டை மானக் கூர்ப்பு அன்மை.

மழுங்குணி - மழுங்கிய தன்மை, அறிவுக் கூர்ப்பும் மான

வுணர்வும் மழுங்கியதன்மை

L

என்பது

“அவன் மழுங்குணி; போட்டதைத் தின்பான் சொன்னதும் தெரியாது; சொரணையும் கிடையாது” என்பதில் இரு தன்மை களும் அறிய வருதல் அறிக. மழுக்கட்டை காண்க.