உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

இளங்குமரனார் தமிழ்வளம்

மழுமட்டை - அறிவின்மை, வழுக்கலான தன்மை

1

மழுமழுப்பு என்பது வழுக்கல், மட்டை என்பது மடல். தென்னை பனை ஆகியவற்றின் மட்டை. “குட்டையில் ஊறப் போட்ட மட்டை L மழுமட்டை எனப்படும். மழுமழு அல்லது வழுவழுத் தன்மையுடையதாக அஃதிருக்கும். ஊறிய மட்டை போன்ற தன்மையுடையவன் மழுமட்டை என்க. ஊறப்போட்டு நார் உரிக்கப் பயன்படுவது புளிச்சைமட்டை. ஊறிய நீரையும் மழுமழுக்க வைத்துவிடும். கையால் தொடவே வழுக்கலும் நாற்றமும் உடையதாக இருக்கும் “அவன் மழுமட்டை; அவனை வைத்துக்கொண்டு எப்படி மாரடிப்பது?” என்பது வழக்குச்

செய்தி.

மழைபெய்தல் - செழிப்பு மிகுதல், செல்வம் மிகுதல்

“உங்கள் காட்டில் மழைபெய்கிறது; பெய்யட்டும்; பெய் யட்டும்” என்பது மழையைக் குறியாமல் பணவருவாய் பெருகி வருதலைக் குறிப்பதாம். அடைமழை பெய்வதுண்டு. பல நாள்கள் தாடர்ந்து பெய்வது அது. அதுபோல் தொடர் தொடராய் வருமானம் வருவதையே மழைபெய்வதாகக் குறிக்கப்படு கிறது. “மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை” என்றால், மழை வருவாய்க் குறியானது சரியானதே.

மறுத்து - திரும்ப, மீள, மற்றும்

ஒன்றைச் சொல்ல அதற்கு எதிரிடையாகச் சொல்வதோ, ஒன்றைச் செய்ய அதற்கு எதிரிடையாகச் செய்வதோ மறுப் பாகக் கொள்ளப்படும். ஆனால் “நான் சொன்னேன்; மறுத்து என்ன சொல்வது என்பதில் மறுப்புப் பொருள் இல்லை. திரும்பவும், மீளவும் என்னும் பொருளேயுண்டு. இலக்கியம் வல்லார் 'மற்றும்' என்பது போல ‘மறுத்து' என்னும் ஆட்சி பொதுமக்கள் வாழ்வில் உள்ளதாம். “நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். மறுத்து நீ என்ன செய்கிறாய்?” நீ என்பதிலும் மறுத்து இப்பொருளதாதல் அறிக.

மாட்டிவிடல் - சிக்கலுண்டாக்கல்

66

ஒரு கொக்கியை மற்றொரு கொக்கியில் அல்லது மாட்டி யில் மாட்டி விடுவது மாட்டல் ஆகும். மாட்டு எனச்சொல்லப் படும் இலக்கணம் பொருந்திய வகையால் தொடரை இணைத்த லாம். இது மாட்டிவிடக் கூடாத வகையில் மாட்டிவிட்டு சிக்கலுக்கு ஆளாக்கி அதனால் மகிழ்வதில் விருப்பமுடையவர்