உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

செய்யும் சிறு செயலாகும். இணைத்து விடுதல்,

145

சைத்து

விடுதல் என்பவற்றுக்கு எதிரிடையானது மாட்டி விடுதல், சொல்லால் அவ்வெதிரிடை வெளிப்படுவதில்லையாயினும் குறிப்புப் பொருளால் வெளிப்படுவதாம்.

மாரடித்தல் - சேர்ந்து செயலாற்றல்

இறந்தாரை நினைத்து மகளிர் சிலர் பலர் கூடி மாரடிப்பது நம் நாட்டில் அண்மைக்காலம் வரை இருந்த வழக்கே. மாரடித்த கூலி மடிமேலே" என்பதும் “கூலிக்கு மாரடித்தல்” என்பதுவும் மாரடித்தல் நிலையை விளக்கும். ஒப்புக்காக அழும் ஒப்பாரி கூலிக்கு அன்று மாரடிப்பு கூலிக்கு உரியது. மாரடிப்பில் ஒருவர் முன்னே பாடி மாரடிக்கப் பின்னே பலர் பின்பாட்டோடு மாரடிப்பர். அப் பின்பாட்டும் முன்பாட்டும் தொடர்பு கொண்டு முழுமையாகும். தொடர்பு அமையா மாரடி அவலத்திற்கு மாறாக, நகைப்புக்கு இடமாகி விடும். அதனால், "உன்னோடு மாரடிக்கமுடியாது; நீ கெடுத்து விடுவாய்” என்பது வழக்கில் ஊன்றியது.

மாறல் - ஏற்பாடு

மாறுதல், மாறலாம். இம் மாறல் அப்பொருளில் மாறி ஏற்பாட்டுப் பொருளில் வருகிறது. கைம்மாறல், கைம்மாற்று என்பவை வழக்கில் உள்ளவை. கைம்மாறல் வாங்க முடியாத ஒருவர் அதனை வாங்கித் தரமுடிந்தவரிடம் “உங்கள் மாறலாக வாவது கிடைக்கும் என நம்புகிறேன்” என்பர். இவண் மாறல், ஏற்பாடாகும். உங்கள் மாறல் என்பது உங்கள் கைம்மாற்று ஏற்பாட்டு வகையால் என்பதை உள்ளடக்கி வருகின்ற வழக்காகும். மினுக்குதல் - அணிகளால் மயக்கல்

மின் - மினுகு - மினுக்கு என்பன ஒளியுடன் பளிச்சிடலைக் குறிப்பன. மினுக்குதல் என்பது பானை சட்டி முதலியவற்றின் அழுக்கினைப்போக்கத் தேய்ப்பதைக் குறிப்பிடுதல் அறிக. அம்மினுக்குதல் போலவே அணிகலம் அணிந்தும் பூச்சும் புனைவும் செய்தும் தம்மை வெளிச்சம் காட்டுபவர் மினுக்குபவர் எனப்படுவர். அம்மினுக்குதலுக்கு வயப்பட்டோர் தம்மை இழந்து தகாத வகையில் சிக்கி அழிந்து போவர்.

மீளா உறக்கம் - இறப்பு

உறக்கம் விழிப்பு என்பவை மாறிமாறி நிகழ்பவை. ஆத லால் உறக்கம் மீளவும், விழிப்பு மீளவும் வருதலால் அவை