242
கடகம்:
இளங்குமரனார் தமிழ்வளம்
―
1
கடகம் ஓர் அணிகலம். ஆண்கள் கடகம் அணிவதைக் கம்பர், “கடகக்கை புடைத்து” என்று குறிப்பார். கடகம் வளைவு உடையது. பனைநாரால் பின்னப்படும் பெரும் பெட்டி கடகப் பெட்டி எனப்படுவது குமரி, நெல்லை வழக்காகும்.
கடகால்:
நீர் ஏறா மேட்டுக்கு நீர் ஏற்ற ‘இறைபெட்டி' போட்டு அள்ளி விடுவர். அது இருவர், நால்வர் செய்யும் பணி. நீரை ஒருவர் அள்ளி விடும் அளவில் அமைந்தது கடகால் (கடை கால்) எனப்பட்டது. அது, கிணற்றில் நீர் சேந்தும் வாளியைக் குறிப்பதாகக் கடகால் என்னும் பெயரில் முகவை, நெல்லை மாவட்ட வழக்குகளில் உள்ளது.
கடம்பால்:
கடம்
66
எ-டு: கட
என்பது காடு,
66
காடு, செறிவு என்னும் பொருளது. மா தொலைச்சிய கானுறை வேங்கை' தலை காடாகக் கிடக்கிறது” என்பது பேச்சு வழக்கு. செறிவுடைய அல்லது கட்டியான சீம்பாலைக் கடம்பால் என்பது விருதுநகர் வட்டாரவழக்கு.
கடிப்பான்:
முகட்டுப்பூச்சி எனப்படும் மூட்டைப் பூச்சியைக் கடிப்பான் என்பது இராசபாளைய வட்டார வழக்கு. மூட்டைக் கடி தாங்க வில்லை என்பது பேச்சு வழக்கு. கூழுக்குத் தொடுகறியைக் கடிப்பான் என்பது நெல்லை வழக்கு. கறித்தல் = கடித்தல். இன்னம் பசும்புல் கறிக்கல்லா இளங்கன்று" என்பது குமரகுருபரர் வாக்கு.
கடிப்பு:
கடிப்பதும், கடித்துத் தின்னும் பொருளும் கடிப்பு எனப்படும். கருப்புக் கட்டியைக் கடித்துக் கொண்டு குடிக்கும் தேநீர் கடிவெள்ளம் எனப்படுதல் மலையாள வழக்கு. இரு முனைகளும் கௌவிப் பிடிக்கும் இடுக்கி என்னும் கருவியைக் கடிப்பான் என்பது மதுரை, நெல்லை மாவட்ட வழக்காகும். கடுக்கன்:
ஆ
கடுக்கை என்பது கொன்றை. அதன் பூப் போன்றதும் அணிவதுமாம் அணிகலம் கடுக்கன்
ண்கள் காதில்