உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோட்டி:

வட்டார வழக்குச் சொல் அகராதி

287

கோள்+தி கோட்டி. கொள்வது. உண்ணும் உணவைக் கொள்ளும் இடம் குடல் ஆதலால், குடலுக்குக் கோட்டி என்னும் பெயரைப் புலவு வணிகர் கொள்கின்றனர். அன்றிக் குடற்கறியையும் கோட்டி என்பராம்.

கோடாங்கி:

குடல்

போகின்றவர் முகக்குறி, கண்குறி, சொற்குறி முதலிய வற்றை வாங்கிக் கொண்டு குறி கூறுபவர்க்குக் கோடாங்கி (கோள் தாங்கி) என்பது பெயர். கொட்டும் தட்டிக் கூறுவதால் கொட்ட டங் ங்கி' என்று வழங்குகிறது களவியல் காரிகை. குறிகாரர் இருந்த ஊர், கோடாங்கி பட்டி என வழங்கப்படுகின்றது. சிலர்க்குக் கோடாங்கி என்னும் பெயரும் உண்டு. இவை தென்னக வழக்கு.

கோணக்கன்:

மாறுகண் என்பது பொதுவழக்கு. எதையோ பார்ப் பது போல் தோற்றம் தந்து வேறொன்றைப் பார்ப்பதாக இருப்பதை மாறுகண் என்பர். புதுக்கடை வட்டாரத்தில் மாறுகண் என்பதைக் கோணக்கண் என்கின்றனர். கோணக்கால், கோணக்கை, கோணன், கோணையன் என்பவை எல்லாம் வளைவுப் பொருளில் வழக்கிலுள்ள தென்னகச் சொற்களாம். கோந்து:

பழநாளில் பயின் என வழங்கப்பட்ட பசைப் பொருள் பிசின் என வழங்குகின்றது. கொந்து என்பது திரள்வது, கூடுவது என்னும் பொருளது. ஒருவகை நீர் திரண்டு கட்டியாவதால் கோந்து என மக்களால் வழங்கப்பட்டது. கோந்து என்பது தென்னக வழக்கு. ஒன்று சேர்தல் கொந்து கோந்து. பிரிதல் கந்து> கந்தை (கிழிந்த உடை).

கோந்தை:

உள்ளீடு இல்லாத பனங்கொட்டையைக் கோந்தை என்பது பரமக்குடி வட்டார வழக்காகும். கோது என்பது பயனற்றது. “கோதென்று கொள்ளாதாம் கூற்று" என்பது நாலடி. உள்ளீடு இல்லாதது பயனற்றது. கோது > கோத்து > கோத்தை >

கோந்தை.