வட்டார வழக்குச் சொல் அகராதி
தண்ணீர்ப் பழம்:
321
தற் பூசுணை என்னும் நீர் வளமிக்க காயைச் சென்னை வட்டாரம் தண்ணீர்ப் பழம் என வழங்குகின்றது. தென்னகப் பகுதியில் தண்ணீர்க் காய் எனக் கறியாக்கியுண்ணத் தக்க காய் உண்டு. சுரைக்காய் (குண்டுச் சுரைக்காய்) போன்றது அது. தற்பூசுணை என்பதில் உள்ள ‘தன்' என்பது தண்ணீர்ப் பொருளது. தற்காலம் = கார்காலம், மழைக் காலம். ‘தற்பூஸ்’ என்பது கொச்சையும் வழுவுமாம்.
தத்தம்:
தம் தம் என்பது ‘தத்தம்’ ஆகின்றது. கொடுத்தல் என்னும் “பொருளது. வந்தவர்களுக்கெல்லாம் தத்தம் பண்ணி விட்டான்” என்பது பழமொழி. தம் பொருளை வந்தவர் தம் பொருளாகக் கொள்ளுமாறு தருதல் தத்தம் ஆகும். தத்து என்பதும் அத்தகு மக்கட் கொடையே. ஒரு வயல் நீர், அதனை அடுத்த வயலுக்குச் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட மடையைத் தத்துவாய் மடை என்பது உழவர் வழக்கு.
தத்துவான்:
மடை
நீர்தத்திச் செல்லும் மடைவாய், தத்துவாய் என்றும், தத்திச் செல்லும் கிளி தத்தை என்றும், தத்திச் செல்லும் ட்டில் தத்துக்கிளி என்றும் வழங்குதல் பொது வழக்கு. தத்திச் செல்லும் பாய்ச்சையைத் தத்துவான் தத்துவான் என்பது இலத்தூர் வட்டார வழக்காகும்.
தம்பலத்தார்:
வெற்றிலை பாக்கு மென்று திரட்டிய உருண்டை ‘தம்பலம்’ எனப்படும். தம்பலப் பூச்சி எனச் செம்பூச்சி யொன்று மழைநாளில் புல்வெளியில் காணலாம். சிவப்பு நிறத்தால் பெற்றபெயர். வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகிய மூன்றன் கூட்டால் அமையும் தம்பலம் போன்ற ஒட்டுடையவர் - உறவினர் - தம்மை, தம்பலம் என்பது நிலக்கோட்டை வட்டார வழக்காகும். தயநாத்து:
-
"உன் தயநாத்துக்கெல்லாம் நான்மசிய மாட்டேன்” என்பது நெல்லை வழக்கு. தயநாத்து என்பது கெஞ்சுதல் மன்றாடுதல் பொருளது. நாற்று - நாத்து என்றாதல் வழக்கு. தயை - தயவு - தய என நின்றது. நாறுதல் என்பது முளைத்தல்;
-