320
இளங்குமரனார் தமிழ்வளம்
―
1
சிங்கம் புணரி வட்டார வழக்காக உள்ளது. ஏர்த்தடி என்பது முகவை வழக்கு.
தடிவிளையாட்டு:
பழமையானது.
சிலம்பு விளையாட்டு அது சிலம் பாட்டம், கம்பாட்டம் எனவும் வழங்கும். பெட்டவாய்த் தலை வட்டாரத்தில் சிலம்பாட்டம் தடிவிளையாட்டு எனப்படுகிறது. தடிக்கம்பு, ஊன்றுதடி என்பன கம்பு என்னும் பொருளில் வருதல் அறியலாம். “தடி தூக்கியவன் எல்லாம் தண்டற்காரன்” என்பது கொடுங்கோல் குறித்த பழமொழி.
தடைச்சட்டி:
உலை பொங்கி வழியாமல் மூடிக்கு ஊடே வைக்கும் நீர்ச் சட்டியைத் தடைச்சட்டி என்பது திண்டுக்கல் வட்டார வழக்காகும். தடுத்து நிறுத்தும் சட்டி தடைச் சட்டியாம். பொதுமக்கள் பார்வையில் விளங்கும் பட்டறிவுச் செயல் அறிவியல் கூறு அமைந்தது என்பதை விளக்கும் ஆட்சிகளுள் ஈதொன்று. தண்டயம்:
சிவிகை என்னும் ஊர்தி, பல்லக்கு, தண்டியல் என வழக்கில் உள்ளன. சப்பரம் என்பது கோயில் உலா ஊர்தி. இவ்வூர்தி களுக்குப் பயன்படுத்தப்படும் கம்பு வளைய வேண்டுமாறெல்லாம் வளைந்து தருவதும் வளை என்னும் பெயருடையதுமாகிய மூங்கில் ஆகும். தண்டியலுக்குப் பயன்படுவதாம் மூங்கிலைத் தண்டயம் என்பது நாகர் கோயில் வட்டார வழக்காகும். தட்டு வண்டி:
மேல்மூடு இல்லாமல் முன்னும் இருபக்கங்களிலும் தட்டு வைத்த ஒற்றைமாட்டு வண்டியைத் தட்டுவண்டி என்பது நாகர்கோயில் வட்டார வழக்காகும். அவ் வழக்கம், பின்னர்க் குதிரை இழுக்கும் மூடு வண்டிக்கும் பெயராயிற்று. தடுப்பும் உடையது மூடு அல்லது கூண்டு வண்டி. தண்ணீர்க்கால்:
மேல்
அங்கணம் என்னும் இருவகை வழக்கும் அமைந்த சொல், தண்ணீர்க்கால் என்றும், தண்ணீர்க்கிடை என்றும் மேல்புர வட்டார ர வழக்காக உள்ளது. கிடக்கும் நீர் 'கிடை'; இவ் தேக்கமும்) உள்ளமை கண்கூடு.
ஓடும் நீர் 'கால்'; ஓடாமல் விருவகையிலும் (ஓட்டமும்