தட்டி:
வட்டார வழக்குச் சொல் அகராதி
319
தட்டி என்பது தடுப்பு என்னும் பொருளில் பொது வழக்கு. தட்டி பின்னல், தட்டி யடித்தல் என்பவை வழங்கு சொற்கள். தென்னங் கீற்றால் முடைபவை தட்டி என்றும் தடுக்கு என்றும் வழங்கும். இனித் தட்டி என்பதும் தட்டட்டி என்பதும் மாடியைக் குறித்தல் முகவை, மதுரை வழக்குகள் ஆகும். தடுக்கு, தடுப்பு, தடை, தட்டு என்பன வெல்லாம் ஒருவழிச் சொற்கள்.
தட்டு:
தட்டு என்பது தடை என்னும் பொருளில் பொது வழக்குச் சொல். தட்டு என்பது தட்டை என்னும் பொருளில் பழனி வட்டார வழக்காக உள்ளது. தட்டுத்தடை என்பது இணைச் சொல். தட்டுப்படுதல் தோன்றுதல் பொருளது. “கண்ணில் தட்டுப்பட்டாள்” - என்பது பாவேந்தர் பாடிய அழகின் சிரிப்பு. தட்டுதல் என்பது கிடைத்தல் என்னும் பொருளில் சீர்காழி வட்டார வழக்காக உள்ளது. ‘தட்ட மாட்டேன் எனப் போகிறது’ என்பது முகவை வழக்கு. அதுவும் கிடைத்தல் பொருளதேயாம்.
தட்டூடி:
தட்டு+ஊடி=தட்டூடி. தட்டு அமைத்து ஊடுபலகை பரப்பி அமைத்த கட்டிலைத் தட்டூடி என்பது நாகர்கோயில் வட்டார வழக்காகும். வாயாடுவது வாயாடி ஆவதுபோல, ஊடாடுவது ஊடியாயது. பலகைக் கட்டில் ஊடும் பாவும் பலகையாக இருத்தலைக் காண்க.
தடச்சட்டி:
தேர் அகலமானதாயின் தடந்தேர் எனப்படும். ‘தட என்பது அகன்ற பெரிய உயர்ந்த என்னும் பொருள் தரும் உரிச்சொல் ‘தடந்தாள் நாரை’ என்பது குறுந்தொகை. அகன்ற சட்டியாகிய அகல், ஒட்டன்சத்திர வட்டாரத்தில் தடச் சட்டி என வழங்கப் பெறுவது இலக்கிய வழக்கும் மக்கள் வழக்கும் ஒத்தியலும் சான்றாம்.
தடி:
தடி என்பது தடித்தது, வெட்டுதல், தசை முதலிய பல பொருள்தரும் இருவகை வழக்குமுடைய சொல். அப் பொதுப் பொருள் அன்றி, தடி என்பது ஏர்க்கால் என்னும் பொருளில்