330
தீ:
―
இளங்குமரனார் தமிழ்வளம் 1
தீ, தே என்பவை னிமைப் பொருள் தருதல் பொது வழக்கு. தீ என்பது அழகு என்னும் பொருளில் அம்பா சமுத்திர வட்டார வழக்காக உள்ளது. தீவாக = அழகாக. இதனை நோக்க, நீர் சூழ்ந்த நிலப்பகுதியாம் தீர்வு (தீவு) தரும் காட்சியின்பம் துய்த்த பேற்றால் தீவு அழகு என்னும் பொருளில் வழங்கித் ‘தீ’ என அமைந்திருக்கலாம். தீவாக என்னும் சொற்றொடர் வழக்கும் இதனை விளக்கும். ‘தீயாக” என வராமை அறிய வேண்டும்.
தீசல்:
எரிதல், எரிந்து கருகல், வாடை என்பவை பொது வழக்குப் பொருள். ஆனால் பார்ப்பனர் வழக்கில் தீசல் என்பது பொறாமை என்னும் பொருளில் வழங்குகின்றது. உள்ளெரிவே பொறாமை ஆதலால் அதன் வெளிப்படு விளக்கம் இதுவாம். தீத்தாங்கி:
பயன்படுத்தி முடித்த பொருள்களை - அடிக்கடி எடுத்துப் பயன்படுத்தாத பொருள்களை ஒதுக்கிடத்தில் வைப்பது வழக்கம். கூரை வீடுகளில் இதற்கெனப் பரணை அமைப்பது உண்டு. பரணை என்னும் பொருளில் தீத்தாங்கி என்பது திருமங்கல வட்டார வழக்காக உள்ளது. பயன்படுத்தித் தீர்ந்த பொருள் களைத் தாங்குவதால் இப் பெயர் பெற்றிருக்கும்.
தீந்து:
வண்டிச்
ப்
சக்கரத்தில் தேய்மானம், ஒலி ஒலி முதலியவை இல்லாமல் பாதுகாக்க ‘மை’ போடுவது வழக்கம். ‘மசகு’ என்பது முகவை வழக்கு. திருச்செங்கோடு வட்டாரத்தில் மை என்பதைத் தீந்து என்கின்றனர். வைக்கோலை எரித்துக் கரியாக்கி அக் கரியில் எண்ணெய் விட்டக் குழப்பிப் பயன்படுத்துவர். ஆதலால், அவ் வினைப்பாடு கொண்டு ‘தீந்து’ என வழங்கப்படுவதாயிற்று. தீயல்:
தீப்போல் எரிவு உண்டாக்குவதைத் தீயல் என்று நாஞ்சில் நாட்டில் வழங்குகின்றனர். எரிக்கும் குழம்பு காரக் குழம்பு ஆகும். எரிதல் வேதல் என்பதை வயிறு எரிதல் (வயிற்றெரிச்சல்) வயிறுவேதல் என வேதனைப்படுத்துதல் பற்றிய வழக்கு உண்டு. தீயல் என்பது எரிதல் பொருளில் காரக் குழம்பைக் குறித்தல் அருகிய வழக்காக அறியத் தக்கதாம்.