20
திருக்குறள்
தமிழ் மரபுரை
667. உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னா ருடைத்து.
(இ-ரை.) உருள் பெருந்தேர்க்கு அச்சு ஆணி அன்னார் உடைத்து –உருண்டோடுகின்ற பெரிய தேர்க்கு இன்றியமையாத சிறிய அச்சாணி போல, வினைத்திறம் மிக்க சிற்றுடம்பினரை இவ் வுலகம் கொண்டுள்ளது; உருவு கண்டு எள்ளாமை வேண்டும் - ஆதலால், அத்தகையோரை வடிவின் சிறுமை நோக்கித் தாழ்வாக எண்ண வேண்டா.
உருவின் சிறுமை எள்ளாமை வேண்டும் என்பதனாலும் உவமத்தாலும் பெறப்பட்டது. உருளுதல் தேர்ச்சக்கரத்தின் தொழில். சினைவினை முதல்வினையாக நின்றது. பெருந்தேர் ஏழுதட்டுகளைக் கொண்ட முழுத்தேர். அச்சு, சக்கரங் கோத்த குறுக்கு உத்தரம். அச்சாணி, சக்கரங் கழலாதவாறு அச்சின் கடைசியிற் செருகும் ஆணி, அதனாற் கடையாணி யெனவும் படும். அச்சாணி சிறிதாயிருந்தும் பெரிய கோல் தேரையும் தாங்குவதும் அதன் இயக்கத்திற்கு இன்றியமையாததுமான சிறப்புடையது. "அச்சாணி யில்லாத தேர் முச்சாணும் ஓடாது." பெருந்தேரோட்டத்திற்கு இன்றியமையாத சிறிய அச்சாணிபோல், பெருநாட்டாட்சிக்கும் இன்றியமையாத சிற்றுருவப் பேராற்ற லமைச்சர் உளர். அவரை வடிவுபற்றி இகழாது, அவர் மதிநுட்பமும் வினைத்திட்பமும் நோக்கி ஆட்சித்துணையாக அரசன் அமர்த்திக் கொள்க என்பதாம்.
668. கலங்காது கண்ட வினைக்கட் டுளங்காது
தூக்கங் கடிந்து செயல்.
(இ-ரை.) கலங்காது கண்ட வினைக்கண் - தெளிவாக எண்ணித் துணிந்த வினை முயற்சியில்; துளங்காது தூக்கம் கடிந்து செயல் - பின்பு மன அசைவில்லாதும் காலந்தாழ்க்காதும் விரைந்து ஊக்கமாகச் செ-க.
தப்பாது பயன்படுமென்றும் வெற்றியாக முடியுமென்றும் தெளிவாக ஆரா-ந்தறிந்த வினையைக் 'கலங்காது கண்ட வினை' யென்றும், மனத் தளர்ச்சியும் உடற்சோம்பலும் வினையைக் கெடுக்குமாதலின் 'துளங்காது தூக்கங் கடிந்து செயல்' என்றும் கூறினார்.
669. துன்ப முறவரினுஞ் செ-க துணிவாற்றி
யின்பம் பயக்கும் வினை.