உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

திருக்குறள்

தமிழ் மரபுரை


தில்லாயின் உடனுண்ணும்
இல்லோ ரொக்கல் தலைவன்

அண்ணலெங் கோமான் வைந்நுதி வேலே"

(புறம் 65)

என்னும் பாட்டுச் சிறந்த எடுத்துக்காட்டாம்.

அதி. 70 - மன்னரைச் சேர்ந்தொழுகல்

அதாவது, அமைச்சர், குருக்கள், படைத்தலைவர், தூதர், ஒற்றர் ஆகிய ஐம்பெருங் குழுவினர் அரசனையடுத்து ஒழுகும் முறை. முந்தின அதிகார முதற்குறளில் வேந்தவாம் பண்புடைமை' யென்று குறிக்கப்பட்டது இதுவே யாதலின், இது தூதின்பின் வைக்கப்பட்டது.

691. அகலா தணுகாது தீக்கா-வார் போல்க
விகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.

(இ-ரை.) இகல் வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார் - வலிமையுள்ள அரசரை அடுத்தொழுகும் அமைச்சர் முதலியோர்; அகலாது அணுகாது தீக்கா-வார் போல்க - அவரினின்று மிக நீங்காமலும் அவரொடு மிக நெருங்காமலும் தீயருகே குளிர்கா-வார் போல இடைப்பட்ட இடத்தில் நிற்பதும் இருப்பதும் செ-க.

"அரசன் அன்று கொல்லும்; தெ-வம் நின்று கொல்லும்"


"அருளு மேலர சாக்குமன் காயுமேல்
வெருளச் சுட்டிடும் வேந்தெனு மாதெ-வம்
அருளி மற்றவை வாழ்த்தினும் வையினும்

அருளி யாக்க லழித்தலங் காபவோ."

(சீவக. 247)

"தீண்டி னார்தமைத் தீச்சுடும் மன்னர்தீ
ஈண்டு தங்கிளை யோடுமெரித்திடும்

வேண்டி லின்னமிர் துந்நஞ்சு மாதலான்"

(சீவக. 250)

'இகல் வேந்தர்' என்றும், 'அகலா தணுகாது தீக்கா-வார் போல்க' என்றும் கூறினார். அமைச்சர் முதலியோர் மிக நெருங்கின் மதியாமைக் குற்றம் பற்றித் தண்டிப்பவரும், மிக நீங்கின் மந்திரச் சூழ்வினைக்குப் பயன்படாத நிலைமையினருமான அரசர்க்குக் குளிர்கா-வார் மிக நெருங்கின் சுடுவதும்