உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூவகை யாசைபற்றிச் செ-தியை வேறுபடக் கூறாமைப்பொருட்டுத் தூ-மையும், வேற்றரசன் சினத்தைத் தடுப்பதற்கும் தன் வினைக்குச் சார் பாயிருத்தற்கும் துணைமையும், வெறுக்கத்தக்க செ-தியிருப்பினும் விடாமற் சொல்லுதற்பொருட்டுத் துணிவும், எல்லாராலும் நம்பப்படும் பொருட்டு மெ-ம்மையும் வேண்டுமென்றார். 'இன்' இங்கு 'ஒடு'ப்பொருளது. இனி, 'இன்'னைச் சாரியையாகக் கொண்டு ஒடுவுருபு தொக்கதெனினுமாம்.

689. விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்
வா-சோரா வன்க ணவன்.

(இ-ரை.) விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் - தன் அரசன் சொல்லி விடுத்த செ-தியை வேற்றரசரிடம் சென்று கூறுபவன்; வடுமாற்றம் வா - சோரா வன்கணவன் - தனக்கு நேரக் கூடிய தீங்கிற்கு அஞ்சி வா-தவறியும் தாழ்வான சொற்களைச் சொல்லாத திண்ணிய நெஞ்சனாயிருத்தல் வேண்டும்.

வடு-குற்றம். தாழ்வான சொற்களைச் சொல்லுதல் தன் தகுதிக்கேற்காத குற்றமாதலின், வடுமாற்றம்' என்றார். வா- சோராமைக்கு ஏதுவான வன்கண் என்க.

690. இறுதி பயப்பினு மெஞ்சா திறைவற்
குறுதி பயப்பதாந் தூது.

(இ-ரை.) இறுதி பயப்பினும் - தான் கூறுஞ்செ-தியால் தன் உயிரிழக்க நேரினும்; எஞ்சாது - அஞ்சி விட்டுவிடாது; இறைவற்கு உறுதி பயப்பது - தன் அரசன் சொல்லியவாறே வேற்றரசரிடம் செ-தியைச் சொல்லித் தன் அரசனுக்கு நன்மை விளைப்பவனே; தூது ஆம் - சரியான தூதனாவன்.

உம்மை உயர்வுசிறப்பு. 'ஆம்' பிரித்துக் கூட்டப்பட்டது. அதிகமானுக் குத் தொண்டைமானிடம் தூது சென்ற ஒளவையார் வகுத்துரைப்பார் வகை யினராயினும், இறுதிபயப்பினும் உறுதி பயக்கும் தூதிற்கு, அவர் பாடிய,

"இவ்வே, பீலி யணிந்து மாலை சூட்டிக்
கண்டிரள் நோன்காழ் திருத்திநெ - யணிந்து
கடியுடை வியனக ரவ்வே யவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொற்றுறைக் குற்றில மாதோ என்றும்
உண்டாயிற் பதங்கொடுத்