உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

திருக்குறள்

தமிழ் மரபுரை


(இ-ரை.) கடன் அறிந்து - வேற்றரசரிடம் தான் நடந்துகொள்ள வேண்டிய முறைமையை அறிந்து; காலம் கருதி - அவரை நல்ல மனநிலையிற் காணுதற் கேற்ற சமையம் பார்த்து; இடன் அறிந்து - தான் வந்த செ-தியைச் சொல்லுதற்கேற்ற இடமும் அறிந்து; எண்ணி - தான் சொல்ல வேண்டுவ வற்றை முன்னமே தன் மனத்தில் ஒழுங்காக எண்ணி வைத்து; உரைப்பான் தலை - அவ்வாறு சொல்பவன் தலையாய தூதனாவான்.

நடந்துகொள்ளும் முறைமையாவது, அவர் நிலைமையும் அவர் நாட்டு வழக்கமும் தன்னரசன் நிலைமையும் நோக்கி, அவற்றிற்கேற்பக் காணும் முறைமையும் நிற்கும் முறைமையும் சொல்லும் முறைமையுமாம். காலம் என்றது, தட்பவெப்பம் மிகாத நாளிற் பசியுங் களைப்பும் சினமும் வருத்தமும் கவலையுமின்றி மனம் மகிழ்ந்து அல்லது அமைந்து இருக்கும் சமையம். இடம் என்றது தனக்குப் பகையானவரன்றித் துணையானவர் உடனிருக்கு மிடம். எண்ணுதலுள், அரசன் வினவக்கூடிய வினாக்களும் சொல்லக் கூடிய உத்தரவுகளும், தான் மேற்கொண்டு கூறும் மறுமாற்றங்களும் அடங்கும்.

"வடநூலார் இவ் விருவகையாருடன் ஓலை கொடுத்து நிற்பாரையுங் கூட்டித் தூதரைத் தலை, இடை, கடை என்று வகுத்துக் கூறினாராகலின், அவர் மதமுந் தோன்றத் 'தலை' யென்றார்" என்று பரிமேலழகர் இங்கும் தம் தன்மையைச் சிறிது காட்டியுள்ளார். 'தலை' யென்றது சிறந்தவன் என்றே பொருள்படுவதாம். ஓலையை மட்டும் நீட்டி நிற்பவன் தூதனாகான்; ஓலை யாளாகவே யிருப்பான். அத்தகைய வோலை நட்புத் திருமுகமாகவோ பேரரசன் கட்டளையாகவோதான் இருக்க முடியும். தூதன் என்பது அதி காரத்தான் வந்தது. இவ்வாறு குறளாலும் வகுத்துக் கூறும் திறம் கூறப்பட்டது.

688. தூ-மை துணைமை துணிவுடைமை யிம்மூன்றின்
வா-மை வழியுரைப்பான் பண்பு.

(இ-ரை.) தூ-மை - மண் பெண் பொன் என்னும் மூவகையாசையு மின்றித் தூயவனாயிருத்தலும்; துணைமை - வேற்றரசரின் அமைச்சரைத் துணையாக வுடைமையும்; துணிவுடைமை - சொல்லவேண்டிய செ-தியை அஞ்சாது சொல்லும் திடாரிக்கமும்; இம் மூன்றின் வா-மை - இம் மூன்றொடு கூடிய மெ-ம்மையும்; வழி உரைப்பான் பண்பு - தன் அரசன் சொல்லி விடுத்த செ-தியை அவன் சொன்னவாறே வேற்றரசரிடம் சென்று கூறும் தூதனுக்கு இருக்க வேண்டிய தகுதிகளாம்.