உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

திருக்குறள்

தமிழ் மரபுரை


கருதாது; நின்ற ஒளியோடு ஒழுகப்படும் - அரசரிடத்து அமைந்துள்ள தெ-வத் தன்மையொடு பொருந்த ஒழுகுதல் வேண்டும்.

முன்னறி தெ-வங்களான பெற்றோர் தவிர, வேறெந்த உறவினரும் இனமுறைபற்றி எளிமையாகக் கருதாது, மற்றக் குடிகள் போன்றே அரசரைத் தெ-வமாகப் போற்றவேண்டு மென்பது, தொன்றுதொட்ட தமிழ் மரபு. ஆயின், கணவன் உயிர்வாழ்ந்திருக்கும்போது மனைவி அரசாளுதல் தமிழ்மரபன்றாதலின், மேனாட்டு முடிசூட்டு விழாவிற்போல் கணவன் மனைவிக்குமுன் மண்டியிட்டு நின்ற வொளியோ டொழுகல் தமிழகத்தில் இல்லை. ஐம்பூதங்களுள் ஒன்றான தீ, தெ-வத்தன்மையுள்ள தென்று கருதப் பட்டதனாலும், அரசன் துன்பவிருளையும் அகவிருளையும் போக்குவனாதலாலும், அரசனின் தெ-வத்தன்மையை 'ஒளி' என்றார்.

"உறங்கு மாயினும் மன்னவன் றன்னொளி
கறங்கு தெண்டிரை வையகங் காக்குமால்
இறங்கு கண்ணிமை யார்விழித் தேயிருந்

தறங்கள் வௌவ வதன்புறங் காக்கலார்"

(சீவக.248)

என்று திருத்தக்கதேவருங் கூறுதல் காண்க.

அரசன் அன்று கொல்லுந் தெ-வமாதலின், அரசரைப் போற்றாதவர் அன்றே அழிக்கப்படுவர் என்பதாம். 'படும்' என்பது இங்கு 335ஆம் குறளிற்போல் 'வேண்டும்' என்னும் பொருளதாம்.

'இகழார்' எதிர்மறை முற்றெச்சம்.

699. கொளப்பட்டே மென்றெண்ணிக் கொள்ளாத செ-யார்
துளக்கற்ற காட்சி யவர்.

(இ-ரை.) துளக்கு அற்ற காட்சியவர் - நிலைத்த உறுதியான அறிவினை யுடையார்; கொளப்பட்டேம் என்று எண்ணிக் கொள்ளாத செ-யார் - யாம் அரசனால் மதிப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டேம் என்று கருதித் தம் நிலையொடு பொருந்தாதவற்றைச் செ-யார்.

நிலைமை யுயர்ந்தபின் தம் பழைய நிலைமையை நினைத்து முன் போன்றே தாழ்மையா - ஒழுகாது. "நன்னிக்குப் பதவி வந்தால் நள்ளிரவிற் குடைபிடிப்பான்" என்பதற் கிணங்கத் தலைகால் தெரியாது நடப்பவரே