உலகத்துப் பலராதலின், என்றும் ஒருதன்மையராக விருந்து மன்னர் விழைப விழையாது அவரிடத்து நின்ற வொளியோ டொழுகுபவரைத் 'துளக்கற்ற காட்சி யவர்' என்றார். காட்சி என்றது அகக்காட்சியை.
700. பழைய மெனக்கருதிப் பண்பல்ல செ-யுங்
கெழுதகைமை கேடு தரும்.
(இ-ரை.) பழையம் எனக் கருதிப் பண்பு அல்ல செ-யும் கெழு தகைமை - அரசனொடு இளமையிலிருந்தே யாம் பழகினேம் என்று கருதித் தமக்குத் தகாதவற்றைச் செ-யும் தவறான நட்புரிமை; கேடு தரும் அமைச்சர் முதலியோர்க்கு அழிவைத் தரும்.
பழைமையாவது விளையாட்டுத் தோழமையும் கல்வித் தோழமையும். அரசப் பதவியேற்ற பின்பும் பழைய தோழமைபற்றிச் சமநிலை கொண்டாடிக் குற்றஞ் செ-யின், அரசர் பொறாது தண்டிப்பராதலின், 'கெழுதகைமை கேடு தரும்' என்றார். இம் முக்குறளாலும், இளமையும் நெருங்கிய தொடர்பும்பற்றி அரசர் வெறுப்பன செ-யற்க என்பது கூறப்பட்டது.
அதி. 71 - குறிப்பறிதல்
அதாவது, அமைச்சர் முதலியோர் அரசரது உள்ளக்குறிப்பை அவர் முகக்குறிப்பால் அறிந்துகொள்ளுதல், இது மன்னரைச் சேர்ந்தொழுகற்கு இன்றியமையாததாதலின், அதன் பின் வைக்கப்பட்டது. இதனால், அமைச்சர் முகக்குறிநூலும் (Physiognomy) கற்றிருக்க வேண்டுமென்பது குறிப்பா-ப் பெறப்படும்.
701. கூறாமை நோக்கிக் குறிப்பறிவா னெஞ்ஞான்று
மாறாநீர் வையக் கணி.
(இ-ரை.) குறிப்புக் கூறாமை நோக்கி அறிவான் - அரசன் கருதிய கருமத்தை அவன் கூறாமலே அவன் முகத்தை நோக்கி அறியவல்ல அமைச்சன்; எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி - உலகுள்ள அளவும் ஒருபோதும் வற்றாத கடலைத் தன்னுட்கொண்ட ஞாலத்தில் வாழ்வார்க்கு ஓர் அணிகலமாம்.
குறிப்பு உள்ளத்திற் குறித்தது. நோக்குதல் நுனித்துப் பார்த்தல். முகம் என்பது முகத்திலுள்ள கண், கன்னம், மீசை, உதடு, பல், நா முதலிய வுறுப்பு