38
திருக்குறள்
தமிழ் மரபுரை
களைக் குறிக்கும். இவற்றுள் முதன்மையானது கண். உலகம் முத்தொழிற் படுதலின் 'உலகுள்ள அளவும்' என்றும்; ஞாலம் நீராற் சூழப்படாமல் அதைத் தன்னுள் ஒரு கூறாகக் கொண்டிருப்பதனாலும், நீராற் சூழப்பட்ட நிலப்பகுதி பலவாயிருப்பதனாலும், 'தன்னுட் கொண்ட ஞாலம்' என்றும்; கூறப்பட்டது. உலக முழுவதையுங் குறித்தற்கு 'மாறாநீர் வையம்' என்றார். கடலை 'மாறா நீர்' என்றது எதுகை நோக்கி. 'வையத்திற்கு' என்பதன் அத்துச் சாரியை தொக்கது. 'வையம்' என்பது மக்கள் வைகும் நிலப் பகுதிகளைமட்டும் குறிப்பின், 'நீராற் சூழப்பட்ட' என்று பரிமேலழகர் கூறியதும் பொருந்தும். 'குறிப்பு', 'வையம்' என்பன ஆகுபெயர். ஒண்மையும் நுண்மையுமுள்ள மதியினால் மன்பதை முழுவதற்கும் அழகு செ-தலின், 'வையக் கணி' என்றார்.
702. ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
தெ-வத்தோ டொப்பக் கொளல்.
(இ-ரை.) அகத்தது ஐயப்படாது உணர்வானை - ஒருவனது மனத்தின் கண் உள்ளதனை ஒருதலையாக உணர வல்லவனை, தெ-வத்தோடு ஒப்பக் கொளல் வடிவால் மாந்தனாயினும் மதிநுட்பத்தால் தெ-வம் போன்றவ னென்று கருதி, அதற்கேற்ப மதித்துப் போற்றுக.
உணர்தல் உள்ளத்தால் நுணுகியறிதல். மாந்தன் மாந்தனே யாதலின் 'தெ-வமாக' என்னாது 'தெ-வத்தோ டொப்ப' என்றார். 'படாஅ' இசைநிறை யளபெடை.
703. குறிப்பிற் குறிப்புணர் வாரை யுறுப்பினுள்
யாது கொடுத்துங் கொளல்.
(இ-ரை.) குறிப்பின் குறிப்பு உணர்வாரை - ஒருவரது முகக்குறிப்பினால் அவரது உள்ளக் குறிப்பை அறியவல்ல அமைச்சரை; உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல் - அரசர் தம் பத்துறுப்புகளுள் எதை அவர் வேண்டினுங் கொடுத்துத் தமக்குத் துணையாகக் கொள்க.
'குறிப்பிற் குறிப்புணர்வாரை' என்பதற்கு, "தங்குறிப்பு நிகழுமாறறிந்து அதனாற் பிறர் குறிப்பறியுந் தன்மையாரை” என்று பொருளுரைத்து, "முகக் குறிப்பினாலே உள்ளக்கருத்தை அறியுமவர்களை" என்று உரைத்த மணக் குடவ ருரையும், "அரசரது முகங்கொண்ட குறிப்பினான் அவர் யாதானும் ஒரு கருமத்தை அவர் உள்ளம் கொண்ட குறிப்பினை அறிவார் யாவர் மற்று அவர் தம்மை" என்று உரைத்த காலிங்கரையும்; பரிமேலழகர் பழித்தது