உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

திருக்குறள்

தமிழ் மரபுரை





முகட்டு வளையில் தங்குகின்றவள் என்னும் கருத்துப்பற்றி முகடியென்னப்

பட்டாள் போலும்!

937. பழகிய செல்வமும் பண்புங் கெடுக்குங்

கழகத்துக் காலை புகின்.

-ரை.) காலை கழகத்துப் புகின் - ஒருவன் அறம்பொரு ளின்பங்கட்குச் செலவிட வேண்டிய காலத்தில் சூதாடுகளம் புகுந்து ஆடுவானாயின்; பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் - அது தொல்வரவாகிய பழஞ்செல்வத்தையும் நற்குணங்களையும் நீக்கும்.

களம் என்றே பொருள்படும் கழகம் என்னும் பொதுச்சொல், இங்கு இடம்பற்றிச் சூதாடு குறித்தது. 'பழகிய' என்னும் அடை பண்பையுந் தழுவும். ஆதலால், பண்பென்றது இங்கு வழிமுறைப் பண்பை. முன்னோர் தேட்டு முதுசொம் எனப்படும். தான் புதிதாகச் செ-துகொள்ளும் அறம்பொருளே யன்றி முன்னோரிடமிருந்து வழிவழி வந்த செல்வமும் நற்பண்பும் இல்லாமற் போமென்பதாம்.

938.

பொருள்கெடுத்துப் பொ-மேற் கொளீஇ யருள்கெடுத் தல்ல லுழப்பிக்குஞ் சூது.

(இ-ரை.) சூது - சூதாட்டு; பொருள் கெடுத்து - தன்னைப் பயில்கின் றவன் தோல்வியால் அவன் செல்வத்தைக் கெடுத்து; பொ- மேற்கொளீஇ - வெற்றி பெறும் பொருட்டுப் பொ-யை மேற்கொள்ளப் பண்ணி; அருள் கெடுத்து - தோல்வி வருத்தத்தாலும் வென்றவன்மீது கொள்ளும் பொறா மையாலும் எழும் சினத்தால் அருள் நோக்கைக் கெடுத்து; அல்லல் உழப் பிக்கும் - இங்ஙனம் இருமையிலும் துன்புற்று வருந்தச் செ-யும்.

மூவகைத் தீங்குகளுள், முன்னதன் விளைவு இம்மையிலும் பின்ன வற்றின் விளைவு மறுமையிலும் நிகழ்வனவாம். “பொருள் கொடுத்து என்பது பாடமாயின், அவ் வெச்சத்திற்கு முடிவு மேற்கொளீஇ என்புழி மேற்கோடலாகிய வினை, முதல்வினை" என்னும் பரிமேலழகர் உரை பொருந்துவதே. 'கொளீஇ' சொல்லிசை யளபெடை.

939.

உடைசெல்வ மூணொளி கல்வியென் றைந்து மடையாவா மாயங் கொளின்.