உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொருட்பால் - உறுப்பியல் (நட்பு) - சூது

-

165

தோற்பரென்பது புட்கரனும் சகுனியும் இறுதியில் தவறியதால் அறியப்படும். சிறப்பும்மை தொக்கது. 'கவறு', 'கை' என்பன ஆகுபெயர். பலர் கூடுங் கூட்டத்தைக் குறிக்கும் கழகம் என்னுஞ் சொல், அம்பலம், மன்றம் என்னுஞ் சொற்கள்போல் இங்குக் கூடுமிடத்தைக் குறித்தது. கல - கள – கள் - (களகு) கழகு - கழகம். தருக்குதலும் இவறுதலும் கைத்திறமையின் விளைவாகும். பாண்ட வர்க்குச் சூதாடும் வழக்கமும் விருப்பமும் இருந்ததில்லை யென்பதும், அதற்கு மாறாக அதன்மேல் வெறுப்பே யிருந்த தென்பதும்,

66

'அடியு மாண்மையும் வலிமையுஞ் சேனையு

மழகும் வென்றியுந் தத்தங்

குடியு மானமுஞ் செல்வமும் பெருமையுங் குலமு மின்பமுந் தேசும்

படியு மாமறை யொழுக்கமும் புகழுமுன்

பயின்ற கல்வியுஞ் சேர

மடியு மான்மதி யுணர்ந்தவர் சூதின்மேல்

வைப்ப ரோமனம் வையார்’

55

(வில்லி. பார. சபா. சூது. 65)

என்று தருமன் விதுரனிடங் கூறியதினின்று அறியப்படும். ஆதலால், “அவ் விவறுதலாற் பாண்டவர் தம் மரசுவிட்டு வனத்திடைப் போ- ஆண்டு மறைந்தொழுகினரென அனுபவங் காட்டியவாறு" என்று பரிமேலழகர் உரைத்திருப்பது பொருந்தாதென்ப. பாண்டவர் சூதாகச் சூதில் ஈடுபடுத்தப் பட்டாரேயன்றித் தாமாக விரும்பி யாடினாரல்லார்.

936.

அகடாரா ரல்ல லுழப்பர் சூதென்னு முகடியான் மூடப்பட் டார்.

-

(இ-ரை.) சூது என்னும் முகடியான் மூடப்பட்டார் சூதாட்டு என்னும் மூதேவியால் ஆட்கொள்ளப்பட்டவர்; அகடு ஆரார் அல்லல் உழப்பர் இம்மையில் வயிறார உண்ணப்பெறார்; மறுமையில் நரகத்துன்பத்தால் வருந்துவர்.

பொருளீட்டும் முயற்சியைக் கெடுத்து வறுமையைக் கொடுத்தலால் 'முகடி' யென்றும், புதிதாகப் பொருளீட்டாது பழம்பொருளையும் பணையமாக வைத்திழத்தலால் 'அகடாரார்' என்றும், பொ-யும் வஞ்சனையுங் களவும் பழகுதலால் ‘அல்லலுழப்பர்' என்றும் கூறினார். வயிறு நிரம்பாமை சொல் லவே, பிற புலன் நுகர்ச்சியில்லாமை சொல்லாமலே பெறப்படும். வீட்டு