164
திருக்குறள்
தமிழ் மரபுரை
பின்னரே கா-களைப் பா-ச்சுதலால், அக் கூற்றுக் கருவியொடு சார்த்திக் கூறப்பட்டது. 'போஒ - இசைநிறை யளபெடை. பொருள்களையெல்லாம் பணையமாக வைத்துத் தோற்றபின், அவற்றின் வருவா-களையும் வைப்பது வழக்கமாதலின், 'பொருளாயம் புறமே படும் என்றார். 'ஆயம்' வட மொழித் திரிசொல்" என்பது பரிமேலழகர் நச்சுக் கூற்று. ஏகாரம் பிரிநிலை.
934. சிறுமை பலசெ-து சீரழிக்குஞ் சூதின் வறுமை தருவதொன் றில்.
(இ-ரை.) பல சிறுமை செ-து சீர் அழிக்கும் சூதின் - பல்வேறு இழிவு தருந் துன்பங்களைச் செ-து உள்ள பெருமையையுங் கெடுக்கும் சூதாட் டைப்போல; வறுமை தருவது ஒன்று இல் கொடிய வறுமையைத் தரக் கூடியது வேறொன்றுமில்லை.
-
நளன்போல் மக்களைவிட்டுப் பிரிவதும், காதல் மனைவியைக் காட்டில் விட்டு நீங்குவதும்; பாண்டவர்போல் மனைவியையும்
பணையமாக
வைத்திழப்பதும், பகைவர் அவள் கூந்தலைப் பிடித்து அம்பலத்திற் கிழுத்து வந்து மானக்கேடா-ப் பேசித் துகிலுரியப் பார்த்திருப்பதும், வென்றவர்க்கு அடிமையராகி மேலாடையைக் களைவதும் பல்வகைச் சிறுமைகளாம். சூது ஐம்பெருங் குற்றங்களுள் ஒன்றாதலாலும், அதை யாடுவோர் தீயோரொடு சேர்த்து எண்ணப்படுவதாலும், தோற்றவர் நாட்டையும் செல்வத்தையும் இழத்தலாலும், ‘சீரழிக்கும்` என்றார்.
935. கவறுங் கழகமுங் கையுந் தருக்கி
யிவறியா ரில்லாகி யார்.
(இ-ரை.) கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் - சூதாட்டும் சூதாடுகளமும் கவறுருட்டுங் கைத்திறமும்பற்றிப் பெருமை பாராட்டிப் பற்றுள்ளங்கொண்டு ஆடியவரும்; இல்லாகியார் - தம் எல்லாச் செல்வமும் இழந்தவராயினர்.
“கேடில் விழுச்செல்வங் கேடெ-து சூதாடல் ஏடவிழ்தார் மன்னர்க் கியல்பேகாண்
95
(நள.9)
என்றவாறு, இது பண்டு சூதாடித் தம் பொருள் முற்றுமிழந்த அரசரையுஞ் செல்வரையும் நோக்கிப் பொதுப்படக் கூறியதாகும். கைத்திறமாவது வேண்டியவா றெல்லாம் கவறுருட்டும் தேர்ச்சி. அத்தகைத் திறவோரும்