பொருட்பால் - உறுப்பியல் (நட்பு) -சூது
163
வறியவரது பொருளால் ஒருவன் செல்வனாதல், திருவள்ளுவர் அறநெறிக்கும் பொருள்நூற் கொள்கைக்கும் முற்றும் மாறாம். 'வென்றதூஉம்' இன்னிசை யளபெடை. 'பொன்' ஆகுபெயர். இங்குப் பொன்னென்றது கரும்பொன்னாகிய இரும்பை.
932. ஒன்றெ-தி நூறிழக்குஞ் சூதர்க்கு முண்டாங்கொ
னன்றெ-தி வாழ்வதோ ராறு.
(இ-ரை.) ஒன்று எ-தி நூறு இழக்கும் சூதர்க்கும் - தூண்டில் முள்ளைப் பொதிந்த இரையைப் பெற்றுப் பின்பு உயிரையிழக்கும் மீன்போல, முத லாட்டத்தில் வென்று ஒரு தொகையைப் பெற்று பின்பு இன்னும் பெறுவோம் என்னும் ஆசையால் மேலும் மேலும் ஆடி, முன்பு பெற்றதுபோல் நூறு மடங்கு இழந்து வறியராகிய வாழ்நாள் குன்றியிருக்கும் சூதாடிக்கட்கும்; நன்று எ-தி வாழ்வது ஓர் ஆறு உண்டாம் கொல் - அறமும் இன்பமும் பெற்று நன்றாக வாழ்வதொரு வழியும் உண்டாகுமோ? உண்டாகாது.
பொருளைச் சூதாட்டிலேயே தொடர்ந்து செலவழிப்பதாலும் வரவரப் பொருள் குன்றி வருவதாலும், 'நன்றெ-தி' வாழும் வழியில்லை யென்றார். 'ஒன்று', ‘நூறு' என்பன பொருள் குறியாது அளவு குறித்தன. 'நூறு' என்பது இங்குப் பேரெண்ணைக் குறித்தது. உம்மை இழிவுசிறப்பு. கொல்' வினா.
933.
உருளாய மோவாது கூறிற் பொருளாயம்
போஒ-ப் புறமே படும்.
(இ-ரை) உருள் ஆயம் ஓவாது கூறின் - ஒருவன் உருள்கின்ற கவற் றொடு சேர்ந்த பணையத்தை இடைவிடாது சொல்லிச் சூதாடுவானாயின்; பொருள் ஆயம் போ-ப் புறமே படும் - அவன் தேடிய செல்வமும் பொருள் வருவாயும் அவனை விட்டு நீங்கி எதிரிகளிடம் போ-ச் சேரும்.
‘ஆயம்` இரண்டனுள் முன்னது சூதாட்டைக் குறித்தது; தாயம் என்னும் சொல்லின் திரிபு; பின்னது வருவாயைக் குறித்தது; வா என்னும் சொல்லி னின்று திரிந்தது. 'உருளாயம்' வினைத்தொகை. 'பொருளாயம்' உம்மைத் தொகை. ஆயம் என்னும் சூதாட்டுப் பெயர் உருள் என்னும் அடையால் சூதாட்டுக் கருவியையும், கூறின் என்னும் வினையால் பணையத்தையும் குறித்து இருமடியாகு பெயராயிற்று. பணையம் பந்தயப் பொருள்; வட்டினி யென்றும் பெயர்பெறும். ஒவ்வொரு சூதாட்டத்திலும் பணையங் கூறிய