உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

திருக்குறள்

தமிழ் மரபுரை





காணுங்கால் - கள்ளுண்டு வெறித்த பிறனைக் காணும்போது; உண்டதன் சோர்வு உள்ளான் கொல் - தான் உண்டபொழுது தனக்கிருந்த மயக்கத்தையும் உவமை யளவையாலறிந்து, அதுவும் இத்தகையதே யென்று கருதான் போலும்!

கள்ளுண்டு வெறித்த நிலையின் இழிவை, உவமையளவையாலும் கருத்தளவையாலும் அறிந்தபின்னும் திருந்தாத கட்குடியன் நிலைமை நோக்கி, ஆசிரியர் வருந்திக் கூறியவாறு. 'கொல்' ஐயம்.

அதி. 94 சூது

அதாவது, கள்ளூண் போன்றே அறம்பொரு ளின்பங்கட்குத் தடையா - நின்று பகைபோல் தீங்கு விளைக்கும் கவறாட்டு. சூது என்பது ஒருவகைக் கா. அதன் பெயர் இங்கு அதைக் கருவியாகக் கொண்டு ஆடும் கவறாட் டைக் குறித்தது ஆகுபெயர். கள்ளூண்போல் சூதாட்டமும் விலக்கப்படுவ தாதலின், இவ் வதிகாரம் கள்ளுண்ணாமையின் பின் வைக்கப்பட்டது.

931.

வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை வென்றதூஉந் தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.

-

(இ-ரை.) வென்றிடினும் சூதினை வேண்டற்க - தான் வெல்லுந் திறமை யும் வாப்பும் உடையனாயினும் சூதாட்டை விரும்பற்க; வென்றதூஉம் தூண்டில் பொன் மீன் விழுங்கிய அற்று வென்று பொருள் பெற்றதும் இரை யால் மறைக்கப்பட்ட தூண்டில் முள்ளை இரையென்று கருதி மீன் விழுங் கினாற் போன்றதே.

வெல்லுதல் உறுதியின்மையின் 'வென்றிடினும்' என்றும், தீயவழியிற் பொருள் வருதலான் 'வேண்டற்க' என்றும் கூறினார். தொடக்கத்தில் வென்ற பொருள் சூதாட்டை விட்டு ஒருபோதும் நீங்காதவாறு பிணிக்கும் பொறி யென்பதும், அதனாற் பின்பு பொருளெல்லாம் இழந்து உயிரும் துறக்க நேருமென்பதும், உவமையாற் பெறப்படும். சூதாட்டின் தன்மையுள்ள சீட்டாட்டும் சூதாட்டே. சூதாட்டின் தன்மைகள்: வெற்றி உறுதியின்றிக் குருட்டு வாப்பாயிருத்தல், சில வலக்காரங்கள் கையாளப் பெறுதல், தோற்றார் வைத்த பணந்திரும்பாமை, ஒருவன் உழைப்பின்றி விரைந்து பிறர் பணத்தாற் செல்வனாதல், இழக்குந்தொறும் ஆசையுண்டாகி மேன்மேலும் வறுமை மிகுதல், வென்றார்மீது பொறாமையுண்டாதற் கிடமாதல், உழைப்பில் விருப் பஞ் செல்லாமை என்பனவாம். சீட்டின் விலை மிகக் குறைந்தும் பரிசுத் தொகை மிகவுயர்ந்தும் பரிசுகள் மிகப் பல்கியும் இருப்பது, தூண்டில் முள்ளை மறைக்கும் இரைபோற் கவர்ச்சிக் குரியதாம். செல்வரது பொருளாலன்றி